Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசின் பொருளாதார கொள்கை. பாஜக எதிர்ப்பு

அரசின் பொருளாதார கொள்கை. பாஜக எதிர்ப்பு
, புதன், 13 பிப்ரவரி 2008 (12:22 IST)
மத்திய அரசின் பொருளாதார கொள்கைக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மக்களவையில் அரசு ரூ.33,290.87 கோடிக்கு துணை செலவு மாணிய கோரிக்கைக்கான மசோதா தாக்கல் செய்துள்ளது. இதன் மேல் நடந்த விவாதத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் ராம்தாஸ் அகர்வால் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் மத்திய அரசின் பொருளாதார கொள்கையால் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது. இந்த அரசின் பொருளாதார கொள்கையால் சாதாரண ம‌னிதன் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்பது விழுக்காடு பொருளாதார வளர்ச்சியும், அந்நிய மூலதனமும் அதிகளவு வருகின்றது. அதே நேரத்தில் இதனால் சிலர் மட்டும் பயனடைகின்றனர். அவர்களிடம் மட்டுமே பணம் குவிகின்றது. பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் பெரும்பான்மையான மக்களை சென்றடையவில்லை. வறுமைதான் அதிகரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதமும், சில மாநிலங்களில் நக்ஸ்லைட்டுகள் வளர்வதற்கு‌ம் முக்கிய காரணம் வேலையில்லா திண்டாட்டமும், வறுமையும் தான். இங்கு நிலவும் சூழ்நிலையே நாடு முழுவதும் பரவுவதற்கு தற்போது கடைபிடித்து வரும் பொருளாதார கொள்கை காரணமாக இருக்கின்றது.

கோதுமை, அரிசி, காய்கறி, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை 50 முதல் 70 விழுக்காடு அதிகரித்துள்ளது.பெரிய தொழில் நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதால் சில்லரை வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அரசுக்கு எச்சரிக்கின்றேன்.

ரிலையன்ஸ் போன்ற பெரிய தொழில் நிறுவனங்கள் அவர்களுக்கு உரித்தான வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். காய்கறி வியாபாரத்தில் ஈடுபடக் கூடாது.

அத்தியாவசிய பொருட்கள், தங்கம், வெள்ளி, பங்குச் சந்தையில் முன்பேர வர்த்தகம் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் ஊக வணிகம் நடைபெறுகின்றது. இதனால் சாதாரண மணிதர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மத்திய அரசு 2004-05 ம் நிதியாண்டில் தொழில் துறைக்கு ரூ.1,58,661 கோடி சலுகைகள் வழங்கி உள்ளது என்று அகர்வால் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil