Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தின் மூலம் தங்கம் விற்பனை!

Webdunia
வியாழன், 29 நவம்பர் 2007 (19:40 IST)
தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களை விற்பனை செய்யும் ரித்திசித்தி புல்லியன்ஸ் லிமிடெட் அடுத்த மார்ச் மாதத்தில் இருந்து இணையத்தின் வழியாக தங்கத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இது குறித்து இதன் செயல் இயக்குநர் பிரிவிதிராஜ் கோத்தாரி கூறும் போது, தற்போது தங்கம் தொலைபேசி வழியாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இதில் பல இடைத்தரகர்கள் ஈடுபடுகின்றனர். இணையத்தின் வழியாக நேரடியாக விற்பனை செய்ய முடியும். இது ஆபத்து இல்லாதது. அத்துடன் ஒழுங்கு படுத்தப்பட்டது. இதற்கான மென்பொருளை வடிவமைத்துள்ளோம். இதை தற்போது 200 நகை வியாபாரிகளிடம் கொடுத்து பரிசோதனை செய்து வருகின்றோம். அடுத்த மார்ச் மாதத்தில் இருந்து இணையம் வழியாக தங்கம் விற்பனையை துவக்க திட்டமிட்டுள்ளோம் என்று செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் தங்க நகை வியாபாரத்தில் ஆயிரக்கணக்கான நகை வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். தங்க நகை நுகர்வோர்களிடம் (நகை வாங்குபவர்களிடம ்) போய் சேருவதற்கு முன்பு பலரிடம் சுழற்சியாக மாறுகிறது. இதனால் விலை., தரம் ஒரே மாதிரியாக இல்லாமல், மாறுபடுகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments