Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் ஈடிணையற்ற இணையச் சந்தை

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (13:00 IST)
ஈ- பே இந்தியா ( www.ebay.in) இணையத்தில் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாகும். நேருக்கு நேர் வணிகத்தை நடத்திட உதவிடும் இந்தியாவின் ஈடு இணையற்ற சந்தை தலமாகும்.

ஏலம், நிர்ணயிக்கப்பட்ட விலை, வகைப்படுத்தப்பட்ட வர்த்தகம் என நேரடியாக விற்பவரும், வாங்குபவரும் சந்திக்கும் தலமாக ஈ- பே இந்தியா உள்ளது.

இந்தியாவில் உள்ள 670 நகரங்களில் 20 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களைக் கொண்டது ஈ- பே. பாசி.காம் என்ற பெயரில் முன்பிருந்த அந்த இணையதளம்தான் தற்போது ஈ- பே இன்கார்பரேடட் எனும் சர்வதேச நிறுவனத்தின் 100 விழுக்காடு துணை நிறுவனமாகும்.

ஈ- பே இந்தியாவில் தொழில்நுட்பம், வாழ்க்கை முறை, சேர்ப்புகள் என்று 2,000 பிரிவுகள் உள்ள இபே இந்தியாவில், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் இதில் வணிகம் செய்கின்றனர்.

ஈ-பே இந்தியா விவரங்கள்

ஈ-பே நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனமான ஈ-பே இந்தியா நிறுவனம் (முன்பு பாஸீ.காம்) இந்தியாவின் முன்னணி ஆன் லைன் சந்தையாகும்.

ஈ-பே இந்தியாவில் மட்டும் 20 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியாவில் உள்ள 670 நகரங்களிலிருந்து ஈ-பே இணையதளத்தில் பயனாளர்களாக பதிவு செய்து கொண்டவர்கள்.

உங்கள் பொருட்கள் அல்லது சேவைகளை விற்க ஈ-பே இந்தியா 3 வழிகளை வழங்குகிறது. ஏலம், நிலையான விலை மற்றும் வகைப்படுத்தப்பட்டவை (ரியல் எஸ்டேட் மற்றும் சேவைகளுக்காக)

ஈ-பே இந்தியாவில் காணப்படும் 83சதவீத பட்டியல்களில் கடன் அட்டை மற்றும் இணைய வழி வங்கி நடவடிக்கைகள் மூலம் பணம் செலுத்தும் ஒரு பாதுகாப்பான வழியான பைசா பே என்ற வசதி உள்ளது.

ஈ-பே இந்தியா வழியாக ஆயிரக்கணக்கான விற்பனையாளர்கள் தினசரி 2000 விதமான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

சுமார் 12,800 விற்பனையாளர்கள் தங்களது முக்கிய பெருவாரியான வருவாய்க்கு ஈ-பே இணையதளத்தை முதன்மை அல்லது இரண்டாம்பட்ச ஆதாரமாக பயன்படுத்தி வருவதாக ஏ.சி.னீல்சன் சர்வதேச ஆய்வு, ஜூன்2006 தெரிவிக்கிறது.

ஈ-பே இந்தியாவில் ஒரு சராசரி தினத்தில்:

ஒரு ஆபரணத் தயாரிப்பு 7 நிமிடங்களுக்கு ஒரு முறை விற்பனையாகிறது.
ஆடை ஒன்று ஒவ்வொரு 13 நிமிடத்திற்கு ஒரு முறை விற்பனை ஆகிறது.
ஒரு புத்தகம் ஒவ்வொரு 14 நிமிடத்திற்கு ஒரு முறை விற்பனையாகிறது.
ஒரு செல்பேசி சாதனம் 15 நிமிடத்திற்கு ஒருமுறை விற்பனையாகிறது.
ஒரு சேமிப்பு சாதனம் அல்லது ஒரு டிரைவ் 18 நிமிடத்திற்கு ஒரு முறை விற்பனையாகிறது.
காசு அல்லது பண நோட்டு ஒவ்வொரு 19 நிமிடத்திற்கு ஒரு முறை விற்பனையாகிறது.
ஸ்டாம்ப் ஒன்று 24 நிமிடத்திற்கு ஒரு முறை விற்பனையாகிறது.
ஒரு எம்பி3 ப்ளேயர் ஒவ்வொரு 26வது நிமிடமும் விற்பனையாகிறது.
ஒரு கடிகாரம் 33 நிமிடத்திற்கு ஒரு முறை விற்பனையாகிறது.
ஒரு கணினி விளையாட்டு 44 நிமிடங்களுக்கு ஒருமுறை விற்பனையாகிறது
ஒரு டிஜிட்டல் கேமரா ஒவ்வொரு 47வது நிமிடமும் விற்று வருகிறது.
ஒரு விளையாட்டு பொம்மை 97 நிமிடங்களுக்கு ஒரு முறை விற்பனையாகிறது.
ஒரு விசிடி 104 நிமிடங்களுக்கு ஒரு முறை விற்பனையாகிறது
இர்ய் லாப்-டாப் கணினி ஒவ்வொரு 106 நிமிடங்களுக்கு ஒரு முறை விற்பனையாகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments