Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக்கிற்கு கைக்கடிகாரம் ஏற்றுமதி

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2007 (18:12 IST)
பாகிஸ்தானில் கூடிய விரைவி்ல் டைட்டான் ரக கைக்கடிகாரம் (வாட்ச ் ) விற்பனை செய்யப்பட உள்ளது.

டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறுவனம் டைட்டான். இது கைக்கடிகாரம், நகைகள், கண்ணாடி பிரேம் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் பரவலான அளவில் விற்பனையாகும் டைட்டான் ரக கைக்கடிகாரம், நகை, கண்ணாடி பிரேம் ஆகியவற்றை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

இது குறித்து இஸ்லாமாபாத்தில் இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பாஸ்கர் பட் கூறியதாவத ு, பாகிஸ்தானில் ஏற்கனவே டைட்டான் கைக்கடிகாரங்கள் புகழ் பெற்று உள்ளன. டைட்டான் வாட்சுகளை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் துபாயில் இருந்து வாங்குகின்றனர். பாகிஸ்தானில் பெரும்பாலான இநதிய தொலைக்காட்சிகள் ஒளி-ஒலி பரப்பபடுகின்றன. இதன் மூலம் டைட்டன் விளம்பரம் பாகிஸ்தான் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துள்ளது.

அடுத்த சில மாதங்களில் தாய்லாந்திலும் டைட்டன் கைக்கடிகாரம் விற்பனை செய்யப்படும். அடுத்து இந்தோனிஷியாவிலும் விற்பனை செய்ய உள்ளோம்.

அமெரிக்காவில் டைட்டன் ரக நகைகள் விற்பனை செய்யப் போகின்றோம். இதற்காக நியு ஜெர்ஸி, சிகாகா ஆகிய இரு நகரங்களிலும் 2 ஆயிரம் சதுர அடியில் விற்பனை மையத்தை தொடங்க போகின்றோம். அமெரிக்காவில் விற்கப்படும் நகைகள் அங்குள்ள மக்களின் ரசனைக்கு ஏற்றவாறு இருக்கும் என்று பட் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

சாவர்க்கர் பற்றி சர்ச்சை பேச்சு! ராகுல் காந்தி நேரில் ஆஜராக சம்மன்!

சபரிமலை மண்டல - மகரவிளக்கு பூஜை.. இணையத்தில் பதிவு செய்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி..!

ஹெஸ்புல்லாவின் ரகசிய சுரங்கத்தை தகர்த்த இஸ்ரேல்! முக்கிய தலைவர் கொலை!

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பு: மறு ஆய்வு செய்ய கோரிய மனு தள்ளுபடி..!

Show comments