Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோட்டஸ் இந்தியா புதிய யூனிட் வெளியீடு!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (21:28 IST)
லோட்டஸ் இந்தியா பரஸ்பர நிதி நிறுவனம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதற்காக யூனிட்டுகளை வெளியிட்டுள்ளது.

புளோர்டன் பண்ட் மேனெஜ்மென்ட் மற்றும் சப்ரி கேப்பிடல் வேர்ல்ட் வைட் ஆகிய இரண்டு நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் லோட்டஸ் இந்தியா மியூச்சுவல் பண்ட். இந்நிறுவனம் ஏற்கனவே பல்வேறு திட்டங்களில் பரஸ்பர நிதி யூனிட்டுகளை வெளியிட்டு முதலீடு திரட்டியுள்ளது. இவை பங்குச் சந்தை, கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

இப்போது கடன் பத்திரங்களில் மட்டுமே முதலீடு செய்யும் வகையில் லோட்டஸ் இந்தியா பிக்ஸட் மெச்சூரிட்டி பிளான் - 5 என்ற பெயரில் யூனிட்டுகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் முதலீடு அரசு, தனியார் கடன் பத்திரங்கள் நிதி சந்தையில் முதலீடு செய்யப்படும்.

இந்த யூனிட்டுகளில் முதலீடூ செய்யப்படும் தொகை 375 நாட்கள் கழித்து லாபத்துடன் பிரித்து தரப்படும். இந்த யூனிட்டுகளில் தனிநபர்கள், நிறுவனங்கள் முதலீடு செய்யலாம்.
தனி நபர்கள் குறைந்த பட்சம் ரூ.ஐந்து ஆயிரமும் அதற்கு மேலும் முதலீடு செய்ய வேண்டும். நிறுவனங்கள் குறைந்த பட்சம் ரூ.50 லட்சமும் அதற்கு மேலும் முதலீடு செய்ய வேண்டும். இதன் 1 யூனிட் விலை ரூ.10. இதில் நவம்பர் 13 ந் தேதியில் இருந்து நவம்பர் 20ஆம் தேதி வரை முதலீடு செய்யலாம்.

இதில் முதலீடு செய்பவர்கள் 375 நாட்களுக்கு முன் யூனிட்டுகளை திருப்பி கொடுத்து, பணம் கேட்டால் 3 விழுக்காடு தொகை கட்டணமாக பிடித்தம் செய்து கொள்ளப்படும் என்று இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

Show comments