Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகிழக்கு பிராந்திய கொள்கை : ஜெயின் குற்றச்சாட்டு!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (21:26 IST)
மத்திய அரசு வட கிழக்கு தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு கொள்கையை அமல்படுத்துவதில் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று வடகிழக்கு பிராந்திய தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெயின் குற்றம் சாட்டினார்.

இது குறித்து இந்த கூட்டமைப்பின் தலைவர் எஸ். கே. ஜெயின் கவுகாத்தியில் கூறியதாவத ு:

நாங்கள் ( இந்த கூட்டமைப்பின் தூதுக் குழுவினர ் ) பிரதமர் மன்மோகன் சிங்கை சென்ற எட்டாம் தேதி புது டெல்லியில் சந்தித்தோம். இந்த பிரச்சனையை நிதி அமைச்சகத்துடன் பேசி கூடிய விரைவில் தீர்வு காண்பதாக பிரதமர் உறுதி அளித்தார் என்ற ு ஜெயின் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த பிராந்தியத்திற்கான புதிய தொழில் கொள்கை அறிவிக்கப்பட்ட உடன், பெருமளவு மூலதனம் வரும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த கொள்கையை உண்மையான அக்கறையுடன் அமல்படுத்தாத காரணத்தினால், வட கிழக்கு பிராந்திய தொழில் வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது.

பிரதமரிடம் நாங்கள் இரண்டு முக்கியமான விஷயங்களை வலியுறுத்தினோம். முதலாவதாக புதிதாக தொழில் துவங்குபவர்களுக்கு மத்திய தொழில் அமைச்சகம் அறிவித்த மாணியம் பெறுவதில் ஆகும் காலதாமதம்.

இரண்டாவாதாக வருமான வரி விலக்கு பெறுவதில் உள்ள பிரச்சனைகளை எடுத்து கூறினோம். இந்த பிராந்தியத்தில் புதிதாக தொழில் துவங்கிய 400 நிறுவனங்களுக்கு ரூ.600 கோடி மாணியம் வழங்கப்படவில்லை. மத்திய தொழி்ல் அமைச்சகத்திடம் குறிப்பிட்ட கால கெடுவுக்குள் மாணியம் வழங்குவதற்கான முறையான நடைமுறைகள் இல்லை.

இந்த பிராந்தியத்தின் தொழில் வளர்ச்சி கொள்கையில் அறிவிக்கபட்டது போல் முழு வருமானத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்க வருமான வரித்துறை மறுக்கிறது. வருமான வரிதுறை பல்வேறு துணை தலைப்புகளில் வருமானத்தை கணக்கிட்டு, இதர வகை வருவாய் என்று கூறி வரி விதிக்கிறது.
இது தொடர்பாக நாங்கள் வருமான வரி அதிகாரிகளை அணுகி கேட்கும் போது, அவர்கள் அரசிடம் இருந்து எங்களுக்கு சுற்றறிக்கை ( உத்தரவ ு ) வரவில்லை. எனவே வரிவிலக்கு கொடுக்க முடியாது என்று பதிலளிக்கின்றனர்.

புதிய தொழில் கொள்கை மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இதன் படி அமல்படுத்த வேண்டிய உத்தரவுகள் மிக தாமதமாக வெளியிடப்பட்டது. இதை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, அவர் இந்த கால தாமத்தை பற்றி, குறிப்பாக வருமான வரி விலக்கில் காலதாமதம் ஆவது பற்றி கவலை தெரிவித்தார்.

இந்த கொள்கையை அமலாக்குவததை மேற்பார்வையிடும் குழு அமைக்கப்படவில்லை என்பதையும் பிரதமர் ஒத்துக் கொண்டார்.
பிரதமர் வடகிழக்கு பிராந்தியத்தில் திட்ட அமலாக்குவதற்கான அமைச்சகத்தின் செயல்பாடுகளை பற்றி கேட்டறிந்தார். இதன் கவனத்திற்கு பிரச்சனையை கொண்டு செல்வதாக பிரதமர் உறுதியளித்தார்.

இந்த பிராந்தியத்திற்கான சிறப்பு தொழில் கொள்கை அறிவிக்கபட்டவுடன் பல்வேறு நிறுவனங்கள் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த கொள்கையை முழு மனதுடன் அமல்படுத்தினால் ரூ.5,000 கோடி முதலீடு பெறும் வாய்ப்பு உள்ளது என்று ஜெயின் கூறினார்.













எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments