Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் : சைமா!

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2007 (16:03 IST)
தமிழக அரசு ஜவுளி ஆலைகளுக்கு விதிக்கும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தென் இந்திய ஜவுளி ஆலை அதிபர்கள் சங்கம் ( சைம ா ) கேட்டுக் கொண்டுள்ளத ு.

“மாநிலத்தில் உள்ள ஜவுளி ஆலைகள ், மற்ற மாநிலத்தைச் சேர்ந்த ஜவுளி ஆலைகளுடன் போட்டியிடும் வகையில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும ். மத்திய அரசு ஜவுளித் துறைக்கு அறிவித்துள்ள பல்வேறு சலுகைகளின் பலன்கள ், இங்குள்ள ஜவுளி ஆலைகளுக்கு கிடைப்பதற்கு ஏற்ற மாதிரி மாநில அரசு புதிய ஜவுளி கொள்கையை அறிவிக்க வேண்டும ்.

தமிழகம் ஜவுளி துறையின் மையமாக மாறுவதற்கு உரிய முறையில் மாநில அரசு கொள்கைகளை வகுக்க வேண்டும ். இந்த புதிய கொள்கையை தயாரிப்பதற்கு முன ், சங்கம் கொடுத்துள்ள ஆலோசனைகளை அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும ்.

சிற ு, நடுத்தர தொழில் பிரிவுகளுக்கும் வழங்க வேண்டும ். சிற ு, நடுத்தர தொழில் பிரிவுகள் அதிகளவு வேலை வாய்ப்பை வழங்குகவதை கருத்தில் கொண்டு மாநில அரசு பெரிய தொழில் துறைக்கு அளிக்கும் முன்னுரிமைக்கு இணையான முன்னுரிமையை , இந்த பிரிவுகளுக்கும் வழங்க வேண்டும ்.

ஜவுளி தொழில் அதிகளவு மின்சாரத்தை பயன் படுத்தும் துறையாகும ். இந்த மாநிலத்தில் உள்ள ஜவுளி ஆலைகள் மற்ற மாநிலங்களுக்கு இடம் பெயர்வதை தவிர்க்க ஆந்திராவிலும ், ஹுமாசல பிரதேசத்திலும ், அத்துடன் சர்வதேச சந்தையில் இந்திய ஜவுளித் துறைக்கு போட்டியாக உள்ள நாடுகளில் விதிக்கப்படும் அளவிற்கு மின் கட்டணத்தை தமிழகத்தில் உள்ள ஜவுளி ஆலைகளுக்கும் விதிக்க வேண்டும ் ”

இவ்வாறு இந்த சங்கத்தின் தலைவர் டாக்டர் க ே. வ ி. ஸ்ரீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

Show comments