Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (16:05 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் தொடங்கியவுடன் பங்குகளின் விலைகள் அதிகரித்தது. இதனால் சென்செக்ஸ் 125 புள்ளிகள் அதிகரித்து 20,103.44 புள்ளிகளை தொட்டது (நேற்றைய இறுதி நிலவரம் 19,977.67). ஆனால் அதற்கு பின் பங்கு விலைகள் தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக உள்ளது.

காலை 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 19,772.59 புள்ளிகளாக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 205.08 புள்ளிகள் குறைவு.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவு மட்டுமல்லாது, மற்ற பிரிவு பங்குகளின் விலைகளிலும் சரிவு காணப்படுகிறது.
மிட் கேப் 35.49, சுமால் கேப் 13.44, பி.எஸ்.இ. 100 - 79.67, பி.எஸ்.இ - 200 18.13, பி.எல்.இ 500 - 52.96 புள்ளிகள் குறைந்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் காலை 12 மணி நிலவரப்படி, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 5929.35 புள்ளிகளாக உள்ளது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 23.45 புள்ளிகள் உயர்வு. பிறகு நிஃப்டி குறியீட்டு எண்ணும் குறைய தொடங்கியத ு.

இன்று ரிசர்வ் வங்கி பொருளாதார கொள்கையை பகல் 12 மணிக்கு அறிவிக்கின்றத ு. ரிசர்வ வங்கி வட்டி விகிகதத்தை மாற்றி அமைக்குமா? வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்க இருப்புத் தொகையை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு மட்டங்களில் நிலவுகிறத ு.
அத்துடன் பங்குச் சந்தையில் அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள ், அந்நிய நிதி நிறுவனங்கள் மூலம் அதிகளவு டாலர் வந்து குவிவதை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறத ு.

இதன் ஒரு அம்சம் தான் சென்ற வாரம் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வாயிலாக பார்டிசிபேட்டரி நோட் எனப்படும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக பங்குச் சந்தையின் முதலீட்டிற்கு செபி கட்டுப்பாட்டுகளை விதித்தத ு.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி பொருளாதார கொள்கைகளை அறிவிப்பதால ், அதன் எதிரொலியாகவே பங்குச் சந்தையில ், பங்குகளின் விலை ஒரு நிலையில்லாமல் அதிகளவு ஏற்ற இறக்கமாக இருக்கின்றத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments