Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ.என்.ஜி.சி ரூ.31 ஆயிரம் கோடி முதலீடு!

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2007 (18:02 IST)
எண்ணைய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் 11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் பெட்ரோலிய கச்சா எண்ணை உற்பத்தியை அதிகரிக்க ர ூ.31 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளத ு.

அடுத்த இருபது ஆண்டுகளில் கச்சா எண்ணை உற்பத்தி 460 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும் என்று இந்நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஆர ். எஸ ். சர்மா தெரிவித்தார ்.

இந்நிறுவனம் குறைந்து வரும் கச்சா எண்ணை உற்பத்தியை சமன் படுத்துவதுடன ், உற்பத்தியை அதிகரிக்க உள்ளத ு. கச்சா எண்ணை அதிகளவில் உள்ள ஒ. ப ி.இ. சி நாடுகள் தவிர (அரபு நாடுகள ், வெனிஜூலா போன்றவ ை) மற்ற நாடுகளில் சமீப காலமாக கச்சா எண்ணை உற்பத்தி குறைந்து வருகிறத ு.

இந்த மழைகாலம் முடிந்தவுடன ், இந்த நிதியாண்டிற்குள் கடல் படுகைகளில் 300 கோடி டாலர் செலவில் 13 ஆழ்துளை கிணறுகள் தோண்டப்படும ். இதில் 11 ஆழ்துளை கிணறுகள் தோண்டும் பணி அடுத்த ஏப்ரல் மாத்திற்குள் நிறைவேற்றப்படும ்.

அத்துடன் மற்ற ஆறு ஆழ்துளை கிணறு தோண்டும் திட்டங்கள் மதிப்பீட்டு அளவில் உள்ளத ு. இதற்கு ர ூ.9,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளத ு. இது மட்டுமல்லாமல் 11 திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறத ு. இவைகள் பெரும்பாலும் மும்பை அருகே உள்ள கடல் பகுதியில் அமைக்கப்படும ்.

மும்பை கடலில் முப்பது வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட பெட்ரோலிய ஆழ்துளை கிணறும் புனரமைக்கப்படும ். இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் லா ப - நட்ட கணக்கு வரும் 30 ந் தேதி அறிவிக்கப்படும ். சென்ற வருடத்தை வி ட, இநத ஆண்டு நிகர இலாபம் ர ூ.15,600 கோடி அதிகரிக்கும் என்று சர்மா கூறினார ்.

ஒ. என ். ஜ ி. சி என்று அழைக்கப்படும் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் மத்திய அரசுக்கு 74.14 விழுக்காடு பங்கு உள்ளத ு. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு 7.69 விழுக்காடும ், கியாஸ் அத்தாரிட்டி இந்தியாவுக்கு 2.40 விழுக்காடும ். இந்திய காப்பீடு கழகத்திற்கு 2.19 விழுக்காடும ், ஈரோ பசிபிக் குரோத் பண்டிற்கு 1.70 விழுக்காடும ், கேப்பிடல் வோர்ட்ல் குரோத் அண்ட் இன்கம் பண்ட்க்கு 1 விழுக்காடு பங்குகளும் உள்ள ன.


எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு தேர்வில் 100-க்கு 101.66 மதிப்பெண்: முறைகேடு நடந்திருப்பதாக கூறி தேர்வர்கள் போராட்டம்..!

இந்தியா அமெரிக்காவுக்கு வரி விதித்தால், அமெரிக்காவும் இந்தியாவுக்கு வரி விதிக்கும்: டிரம்ப்

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி கடலுக்குள் பாய்ந்த கார்.. சென்னை துறைமுகத்தில் பரபரப்பு..!

இன்று காலை 10 மணி வரை சென்னை உள்பட எத்தனை மாவட்டங்களில் கனமழை? வானிலை எச்சரிக்கை..!

கேரளாவில் இருந்து கொண்டு வந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்: பிரேமலதா

Show comments