Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா சிமென்ட் லாபம் அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2007 (18:10 IST)
இந்தியா சிமென்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என். ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் நாங்கள் முன்பு எடுத்த தைரியமான, புதிய முயற்சி, தொடர் முயற்சிகள், இப்போது பலன் கொடுக்க துவங்கியுள்ளது என்று கூறினார்.

இந்தியா சிமென்டின் நிகர லாபம் இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 90 விழுக்காடு அதிகரித்துள்ளது. நிகர லாபம் ரூ.222.65 கோடியாக உள்ளது.
( சென்ற நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் ரூ.117.32 கோட ி). மொத்த வர்த்தகம் ரூ.890.23 கோடியாக உள்ளது. இத ு சென்ற நிதியாண்டில் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 50 விழுக்காடு அதிகம். (சென்ற நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் ரூ.590.67 கோட ி).

இந்த அறிவிப்பை வெளியிட்டு மேலான்மை இயக்குநர் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

இந்த லாப அறிவிப்பு, இந்தியா சிமென்ட் நிறுவனத்துடன் 2006, ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இணைக்கப்பட்ட விசாகா சிமென்ட் தொழிற்சாலையின் செயல் திறனும் உள்ளடக்கியது. அடுத்த வருடம் சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு பிரச்சனைகள் இருக்காது.

அடுத்த ஆண்டு சிமென்ட் விலைகள் அதிகமாகவே இருக்கும். தற்போது சிமென்ட் விலை ஒரே மாதிரியாக உள்ளது. மழை காலம் முடிந்த பின் வரும் டிசம்பர் மாதம் சிமென்டின் விலை அதிகரிக்கும். அந்த நேரத்தில் சிமென்ட் உற்பத்தியை விட, தேவை அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டு சிமென்ட் உற்பத்தியை குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொள்வோம்.

இப்போது சிமென்ட் உற்பத்தி வருடத்திற்கு 89 லட்சம் டன்னாக இருக்கின்றது. இதை அடுத்த ஐந்தரை ஆண்டுகளில் 140 லட்சம் டன்னாக அதிகரிக்கப்படும். சங்கரிதுர்க்கத்தில் வருடத்திற்கு 6 லட்சம் டன் சிமென்ட் உற்பத்தி செய்யும் ஆலை தொடங்கப்பட உள்ளது என்பது உட்பட பல்வேறு எதிர்கால திட்டங்கள் பற்றியும் தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments