Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தையில் மாற்றம் இல்லை!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (20:44 IST)
மும்பை பங்குச் சந்தையில் காலையில் பங்குகளின் விலை அதிகரித்தது. இதனால் காலையில் 44 புள்ளிகள் அதிகரித்தது. அதற்கு பிறகு பங்குகளின் விலைகள் தொடர்ந்து குறைந்தது. இதனால் ஒரு நிலையில் சென்செக்ஸ் 396 புள்ளிகள் குறைந்தன. மதியம் 12 மணியளவில் விலை உயர தொடங்கியது.

மாலையில் மீ்ண்டும் நேற்றைய இறுதி நிலவரத்தை எட்டியது. இறுதியில் 19,052 புள்ளிகளில் முடிந்தது. இது நேற்றைய நிலவரத்தைவிட ஏழு புள்ளிகள் குறைவு.

இதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் ஏற்ற இறக்கமாக இருந்தது. இறுதியில் நிப்டி குறியீட்டு எண் 5668.05 புள்ளிகளில் முடிந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 4 புள்ளிகள் குறைவு.

இன்று பரிமாற்றம் நடந்த 2,817 பங்குகளில் 1,543 பங்குகளின் விலை குறைந்தது. 1,212 பங்குகளின் விலை அதிகரித்தது. 62 பங்குகளின் விலையில் மாற்றமில்லை.

இன்று மகேந்திரா அண்ட் மகேந்திரா, லார்சன் அண்ட் டூப்ரோ பங்குகளின் விலைகள் குறைந்தன. பாரத ஸ்டேட் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், ஏ.சி.சி, கிராசம்,ஒ.என்,ஜி.சி, சிப்லா, விப்ரோ, ஐ.டி.சி ஆகிய நிறுவன பங்குகளின் விலை குறைந்தன.

ஐ.சி.ஐ.சி.ஐ, ஹின்டால்கோ, ரிலையன்ஸ் எனர்ஜி, மாருதி, என்.டி.பி.சி, சத்யம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஹெச்.டி.எப்.சி வங்கி, அம்புஜா சிமென்ட் ஆகியவற்றின் விலை அதிகரித்தன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments