Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி வாய்ப்பு!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (19:38 IST)
இந்தியாவுக்கும் தென் ஆப்பிரிக்கவுக்கும் இடையேயான வர்த்தகம் 2010-ம் ஆண்டுகளில் 1200 கோடி டாலராக உயர வாய்புள்ளது. இதில் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அந்நாட்டுக்கு மருந்து ஏற்றுமதி செய்ய பெருமளவு வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு மருந்துகள் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் பற்றி ஃபிக்கி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் உள்ள விபரங்கள் :

இப்போது இந்தியாவிற்கும் தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெறும் வர்த்தகம் முழு வாய்ப்புகளையும் பிரதிபலிப்பதாக இல்லை. இந்தியாவில் இருந்து பெருமளவு மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அத்துடன் இரு நாட்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து மருந்து உற்பத்தி நிறுவனங்களை அமைக்கவும், மருந்து விற்பனையில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.

தற்போது பல பெரிய மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு மருந்து ஏற்றுமதி செய்து வருகின்றன. ரான்பாக்ஸி, வொக்கார்டி, சிப்லா, டி.ஆர்.எல். போன்ற நிறுவனங்கள் தென் ஆப்பிரிக்க நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து மருந்து உற்பத்தி தொழிற் கூடங்களை அமைத்துள்ளன.

ஆப்பிரிக்க கண்டத்தில் தென் ஆப்பிரிக்காவில் வருடத்திற்கு 200 கோடி டாலருக்கு மருந்து விற்பனை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

தென் ஆப்பிரிக்க நிறுவனங்கள் ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை அமைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தொழிற்சாலைகளை அமைக்க 40 விழுக்காடு குறைவாக செலவாகும். அதே நேரத்தில் மருந்து உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருட்களின் விலையும் 60 முதல் 70 விழுக்காடு வரை விலை குறைவு.

அத்துடன் உலகத்திலேயே இந்தியாவில் தான் மருந்துகள் விலை குறைவு. சர்வதேச அளவில் உள்ள விலையுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் சில மருந்துகளின் விலை 10 இல் 1 பங்காக இருக்கின்றது.

இத்துடன் இந்தியா மருத்துவ துறையில் முன்னேறிய நாடாகவும் உள்ளது. இந்தியாவில் மருந்து நிறுவனங்களுக்கு தேவையான இரசாயணம் படித்த பட்டதாரிகளும் அதிகளவு உள்ளனர்.

இது போன்ற காரணங்களினால் இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் தென் ஆப்பிரிக்க நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து தொழில் தொடங்கவும் மருந்து ஏற்றுமதி செய்யவும் அதிக வாய்ப்பு உள்ளது என ஃபிக்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments