Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்!

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2007 (13:40 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று சரிவு ஏற்பட்டது. நேற்று பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 19,000 புள்ளிகளைத் தாண்டி, மாலையில் 19,058.67 புள்ளிகளில் முடிந்தது. இது சென்ற வாரம் வெள்ளிக் கிழமையை விட 639.63 புள்ளிகள் உயர்வு. வாரத்தின் முதல் நாளான நேற்று பங்குச் சந்தையின் குறியீட்டு எண் உயர்ந்ததால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த மகிழ்ச்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. இன்று காலையில் வர்த்தகம் தொடங்கியவுடனேயே குறியீட்டு எண் சரிந்து 18,950 புள்ளிகளை தொட்டது. அதற்கு பின் சென்செக்ஸ் பிரிவு பங்குகளின் விலை ஏற்ற இறக்கமாக இருந்ததால் காலை 11 மணியளவில் குறியீட்டு எண் 19,150 புள்ளிகளை தொட்டது. பங்குச் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்வர்கள் சிறிது நிம்மதியடைந்தனர்.

ஆனால், மேலும் பங்குகளின் விலைகள் குறைய ஆரம்பித்தது. 12 மணியளவில் நேற்றைய இறுதி நிலையான 19058 புள்ளிகளை தொட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பின், பங்குகளின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பங்குத் தரகர்கள் கருதுகின்றனர்.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் பத்தாவது நிமிடத்தில் குறியீட்டு எண் நிப்டி 5649 புள்ளிகளாக சரிந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 21 புள்ளிகள் சரிவு. பிறகு பங்குகளின் விலை அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தது. 12 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரமான 5679 புள்ளிகளை தொட்டது. அதற்கு பின் பங்குகளின் விலையில் சிறிது ஏற்றம் காணப்படுகிறது.

அதே நேரத்தில் மிட் கேப், சுமால் கேப் உட்பட மற்ற பிரிவுகளில் உள்ள பங்குகளின் விலைகள் குறையவில்லை.

இந்திய பங்குச் சந்தையை போலவே மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் விலை இறக்கம் காணப்பட்டது. ஜப்பான் பங்குச் சந்தையான நிக்கி 1.07 விழுக்காடும், சிங்கப்பூர் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 0.42 விழுக்காடும், ஹங் சங் 0.43 விழுக்காடும் தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 0.58 விழுக்காடும் குறைந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையின் டோவ் இன்டஸ்டிரியல் 108.28 புள்ளிகளும், நாஸ்டெக் 25.63 புள்ளிகளும் எஸ் அண்ட் பி 500 13.09 புள்ளிகளும் குறைந்தன.

அமெரிக்க பங்குச் சந்தை பாதிக்க காரணம் பெட்ரோலிய கச்சாயெண்ணை 1 பாரல் விலை 86 டாலராக உயர்வு, பல்வேறு வங்கி சேவையில் ஈடுபட்டுள்ள சிட்டி குழுமம் இலாபம் குறையும் என்று அறிவித்ததே காரணம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments