Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச் சந்தை குறியீடு 19,000 தாண்டும்?

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2007 (14:16 IST)
பங்குச் சந்தையில் காலை முதல் பங்குகளின் விலை தொடர்ந்து அதிகரிக்கின்றத ு.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் விறுவிறுப்பாக தொடங்கியத ு. காலையிலேயே 106 புள்ளிகள் (வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தை வி ட) அதிகரித்தத ு. மதியம் 2.00 மணியளவில் சென்செக்ஸ் 18,940 புள்ளிகளை தொட்டத ு. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 521.19 புள்ளிகள் அதிகம ்.

இன்று மாலைக்குள் சென்செக்ஸ் 19,000 புள்ளிகளை தாண்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு பங்குச் சந்தையின் பல மட்டங்களிலும் நிலவுகிறத ு.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள ், பரஸ்பர நிதி நிறுவனங்கள் அதிகளவு பங்குகளை வாங்கி ன.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தால் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும ், இடது சாரிகளுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்துள்ளத ு. சென்ற வாரம் நிலவிய அரசியல் அரங்கில் நிலவிய பதற்றம் இப்போது இல்ல ை.

அத்துடன் தொழில் துறை உற்பத்தி அதிகரிப்ப ு, நேற்று முன் தினம் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பேசும் போத ு, வரப்போகும் பட்ஜெட் சென்ற ஆண்டு பட்ஜெட் போன்றே இருக்கும் என்று கூறி தொழில் துறையினருக்கு நம்பிக்கை ஊட்டியது ஆகிய காரணங்களால் பங்குகளின் விலைகள் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டு எண் உயர்ந்தத ு.

நடுத்தர முதலீடு நிறுவனங்களின் குறியீட்டு எண் மிட் கேப ், சிறிய நிறுவனங்களின் குறியீட்டு எண் சுமால் கேப் ஆகியவற்றின் குறியீட்டு எண்களும் அதிகரித்தன எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிகரித்த ன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் இருந்தே பங்குகளின் விலை அதிகரித்தத ு. காலையிலேயே நிப்டி 102 புள்ளிகள் அதிகரித்தத ு. நண்பகல் 12.30 மணியளவில் 6000 புள்ளிகளைத் தாண்டியத ு.

இந்திய பங்கச் சந்தை போன்ற ே, மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலை உயர்ந்ததத ு. ஜப்பான் பங்குச் சந்தை நிக்கி 0.19 விழுக்காடும ், ஹாங்காங் 0.79 விழுக்காடும ், சிங்கப்பூர் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 0.11 விழுக்காடும் அதிகரித்த ன. தென் கொரியாவின் சியோல் காம்போஸிட் 0.11 விழுக்காடு குறைந்தத ு.

அமெரிக்க பங்குச் சந்தையின் குறியீடுகளும் அதிகரித்த ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments