Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸின் நவீன ஆடை விற்பனை மையம்!

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2007 (17:25 IST)
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் ட ெல்லியின் புறநகர்பகுதியான குர்கானில் நவீன ஆயத்த ஆடை விற்பனை மையத்தை ரிலையன்ஸ் டிரன்ட் என்ற பெயரில் திறந்துள்ளத ு.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ் சில்லரை விற்பனை கடைகளை திறக்க நாடு முழுவதும் ர ூ.25,000 முதலீடு செய்ய உள்ளத ு.

இதற்கு குர்கானில் ஏற்கனவே அம்பி மால் என்ற பெயரில் பிரமாண்டமான சூப்பர் மார்க்கெட் உளளத ு. தற்போது இதில் 30 ஆயிரம் சதுர அடியில் நவீன ஆயத்த ஆடை விற்பனை மையத்தை திறந்துள்ளத ு. இதில் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் புகழ் பெற்ற நிறுவனங்களின் பல்வேறு வகை ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யப்படு்ம ்.

இந்த விற்பனை மையத்தை பற்றி ரிலையன்ஸ் ஆயத்த ஆடைகள் பிரிவின் தலைமை செயல் அதிகாரி அருன் தேஷ்முக் கூறுகையில ்,

இதில் ஃபர்ஸ்ட் கிளாஸ் என்ற என்ற வர்த்தக பெயரில் ஆண்கள ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆயத்த ஆடைகள் விற்பனை செய்யப்படும ். அத்துடன் பழுப்பு அடையாமல் எப்போதும் வெண்மையாக இருக்கும் சட்டைகள ், கசங்காத டிரவுசர ், ஆடைகள ், குழந்தைகளுக்கு நறுமணம் கமழும் ஆடைகள் மற்றம் விரைவாக உளரும் விளையாட்டு வீரர்கள ், வீராங்கனைகள் அணையும் ஆடைகள் உட்பட பல்வேறு ரக ஆடைகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தார ்.

அவர் மேலும் கூறகையில ், இந்த விற்பனை மையங்களில் ல ீ, விராங்க்ளர ், பீட்டர் இங்கிலாந்த ு, ஜான் ஃப்ளேயர ், பிளாக் பெர்ர ி, கினி இன் ஜான ி, லிலிபுட ், இன்டிகோ நேசன ், பிபா ஆகிய நிறுவனங்களின் ஆயத்த ஆடைகளும் விற்பனை செய்யப்படும ்.

இந்தியாவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர்கள் அமெரிக்க ா, பிரிட்டன் மற்றும் மற்ற நாட்டு ஆடை வடிவமைப்பாளர்களுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட ஆடைகள் விற்பனை செய்யப்படும ். இந்த வடிவமைப்பு மையம் பெங்களூரில் அமைக்கப்படும ். அமெரிக்கன் அசோசிசேசன் ஆப் டெக்ஸ்டைல்ஸ ், கெமிஸ்ட் அண்ட் கலரிஸ்ட ், அமெரிக்க தர நிர்ணயம ், இந்திய தர நிர்ணயம் மற்றும் பிர்ட்டிஷ் தர நிர்ணயம் ஆகியவைகளின் தரத்திற்கு ஏற்ப ஆடைகள் தயாரிக்கப்படும் என்று கூறினார ்.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரிசின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் நாடு முழுவதும் இதே மாதிரி 100 விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளத ு. இது ஏற்கனவே அகமதாபாத்தில் ரிலையன்ஸ் மார்ட் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட்டையும ், பல் வேறு மாநிலங்களில் ரிலையன்ஸ் ஃப்ரஸ் என்ற பெயரில் பழம் மற்றும் காய்கறி சில்லரை விற்பனை மையங்களையும ், காஜியாபாத்தில் ரிலையன்ஸ் டிஜிட்டல் என்ற பெயரில் மினனணு சாதனங்களை விற்பனை செய்து வருகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments