Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய பிரதேசத்தில் புதிய சிமென்ட் தொழிற்சாலைகள்!

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (20:38 IST)
மத்திய பிரதேசத்தில் மூன்று புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட இருக்கிறது.

இந்த மாநிலத்தில் சிமென்ட் தயாரிக்க தேவையான மூலப்பொருளான சுண்ணாம்ப ுக ் கல் அதிகளவில் இருக்கின்றது. இந்த மாநிலத்தின் பல பகுதிகளில் பூமிக்கடியில் சுண்ணாம்பு கல் படிவம் குவிந்து கிடக்கின்றன. மத்திய பிரதேஷத்தில் பூமிக்கடியில் 36,260 லட்சம் டன் சுண்ணாம்பு கல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு சிமென்ட் தயாரிப்பதற்கான மூலப் பொருள் தாரளமாக கிடைப்பதால் ரிலையன்ஸ் எனர்ஜி, சாங்கி சிமென்ட் மற்றும் சியாம் குழும நிறுவனங்கள், புதிதாக மாசு ஏற்படுத்தாத சிமென்ட் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளன. இதற்காக இந்த நிறுவனங்கள் சுமார் ர ூ.10,000 கோடி முதலீடு செய்ய உள்ளன.

மத்திய பிரதேசத்தில் ஏற்கனவே சிமென்ட் தொழிற்சாலைகளை அமைத்துள்ள ஜேபி சிமன்ட், டைமன்ட் (மைசூர ்) சிமென்ட், ஏ.சி.சி சிமென்ட், விக்ரம் சிமென்ட், மைகார் சிமென்ட், பிர்லா குழுமத்தின் பிர்லா கார்ப்பரேசன், ரஹிஜா குழுமத்தைச் சேர்ந்த பிரிசம் சிமென்ட் ஆகியவை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன. இதற்காக இவை ரூ.5,000 கோடி முதலீடு செய்ய போகின்றன.

மத்திய பிரதேசத்தில் தற்போதுள்ள சிமென்ட் ஆலைகள் வருடத்திற்கு 170 லட்சத்து 28 ஆயிரம் சிமென்ட் உற்பத்தி செய்கின்றன. இந்தியாவில் அதிகளவு சிமென்ட் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சிமென்ட் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், பிகார், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்டுகிறது.

இநதியாவில் உள்கட்டமைப்பு வசதி, அலுவலகங்கள், வீடுகள் போன்ற கட்டுமானப் பணிகள் இடைவிடாது நடைபெறுகிறது. அதிகரித்து வரும் சிமென்ட் தேவையை கருத்தில் கொண்டு புதிய சிமென்ட் ஆலைகளை நிறுவவும் ஏற்கனவே உள்ள சிமென்ட் ஆலைகளை விரிவாக்கம் செய்யவும் பல நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments