Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தைகளில் சரிவு!

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2007 (13:18 IST)
மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் குறியீட்டு எண் அதிகரித்தது. ஆனால் 12 மணியளவில் பங்குகளின் விலைகள் குறைய தொடங்கியதால், இவைகளின் குறியீட்டு எண் சரிய தொடங்கியது.

மும்பை பங்குச் சந்தையில் காலையில் அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிதி நிறுவனங்கள் ஆகியவை பங்குகளை வாங்கின. இதனால் ஒரு நிலையில் குறியீட்டு எண் 18,696.62 புள்ளிகளை தொட்டது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 38 புள்ளிகள் அதிகம். (நேற்றைய குறியீட்டு எண் 18,658.75)

தேசிய பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் நிப்டி 32 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,473.55 புள்ளிகளாக உயர்ந்தது. (நேற்றைய குறியீட்டு எண் 5441.45)

அதே சமயத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இன்போசியஸ் பங்குகள் 4.93 விழுக்காடும், சத்யம் கம்ப்யூட்டர் 2.43 விழுக்காடும், டாடா கன்சல்டன்சி 3.28 விழுக்காடும், விப்ரோ 2.42 விழுக்காடும் குறைந்தன. பர்தி ஏர்டெல் பங்குகள் விலை 0.46 விழுக்காடு குறைந்தது.

லார்சன் அண்ட் டூப்ரோவின் பங்கு விலை 3.05 விழுக்காடு அதிகரித்து ரூ 3,475 ஆக உயர்ந்தது.

மகேந்திரா அன்ட் மகேந்திரா, மாருதி சுஜூகி, ரெட்டி லேபாரட்டரிஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ஸ்டேட் பாங்க் ஆகியவற்றின் பங்குகள் விலை அதிகரித்தது.

மதியம் 12 மணிக்கு பிறகு மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண் சரிய தொடங்கியது. பனிரென்டரை மணியளவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 58.75 புள்ளிகள் குறைந்தது. சென்செக்ஸ் 18,599.50 புள்ளிகளாக இறங்கியது.

அதே நேரத்தில் மிட்கேப். சுமால் கேப், பி.எஸ்.இ 100 ஆகிய பிரிவுகளின் குறியீட்டு எண் குறையவில்லை.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 5425.40 புள்ளிகளாக குறைந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 16 புள்ளிகள் குறைவு. தேசிய பங்குச் சந்தையிலும் வங்கி பங்குகளின் விலை குறையவில்லை. அதே போல் நடுத்தர நிறுவனங்களின் குறியீடான மிட்கேப், மிட் கேப் 50 விலைப்புள்ளியும் குறையவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக‌ மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: பெங்களூரு போலீசார் அதிரடி..!

உச்சக்கட்ட போரில் இஸ்ரேல்; ஆயுதம் தர மறுத்த பிரான்ஸ்! - நேதன்யாகுவின் கோபமான பதில்!

நாங்களும் சென்னையில்தான் இருக்கோம்.. மழைநீர் வடிகால் பணிகள் முடியவே இல்லை! - பிரேமலதா விஜயகாந்த்!

Show comments