Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிலையன்ஸ் பவர் பங்கு வெளியீடு!

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2007 (13:34 IST)
ரிலையன்ஸ் எனர்ஜியின் இயக்குநர்கள் குழ ு, இதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பவர் பங்குகள ை வெளியிட ஒப்புதல் தந்துள்ளத ு.

ரிலையன்ஸ் அம்பானி குழுமமும ், ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்டும் இணைந்து தொடங்கியுள்ள ரிலையன்ஸ் பவர் நிறுவனம ், மின் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தேவையான முதலீட்டை பொதுப் பங்குகளை வெளியிட்டு திரட்டுவதற்கு ஒப்புதல் வழங்கியள்ளத ு.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம ், பங்குகளை வெளியிடுவதற்கு அனுமதி பெறும் விண்ணப்பம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று ரிலையன்ஸ் எனர்ஜி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

இந்த பங்கு வெளியீட்டின் மூலம் எவ்வளவு முதலீடு திரட்டப்படும் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப் படவில்ல ை. ரிலையன்ஸ் பவர் பல மாநிலங்களில் இயற்கை எரிவாயுவின் மூலம் மின் உற்பத்தி நிலையம ், அனல் மின் உற்பத்தி நிலையம ், மற்றும் நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகிறத ு.

தற்போது பங்கு வெளியீட்டு மூலம் திரட்டப்படும் நிதி இந்த திட்டங்களுக்காக பயன்படுதிதிக் கொள்ளப்படும ்.

ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 4000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ள சாசன் மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளத ு. இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற் ற, ரூ.16,000 கோடி முதல் ர ூ.20,000 கோடி வரை தேவைப்படும ்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்ற ு, ரிலையன்ஸ் எனர்ஜியின் பங்குகளின் விலை 7.9 விழுக்காடு அதிகரித்தத ு. இதன் விலை ர ூ.1,205.50 ஆக உயர்ந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments