Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டியை சமாளிக்க மருந்து கடைக்காரர்கள் திட்டம்!

Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (21:41 IST)
மருந்த ு விற்பனையில ் பெரி ய நிறுவனங்களின ் போட்டிய ை சமாளிக் க, அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளத ு. இதற்காக தனியாக மொத் த, சில்லரை விற்பனை நிலையங்களை நாடு முழுவதும் திறக்க உள்ளத ு.

கோவா மாநில தலைநகர் பனாஜியில் அகில இந்திய மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறுகிறத ு.

இதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்த சங்கத்தின் தலைவர் மோகன ், மருந்து சில்லறை விற்பனையில ், பன்னாட்டு நிறுவனங்கள ், உள்நாட்டு பெரிய தொழில் வர்த்தக நிறுவனங்கள் நுழைவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம ்.

இதற்காக சங்கத்தின் சார்பில் மருந்து மொதத விற்பனையையும ், எல்லா மருந்துகடைகளையும் ஒருங்கினைத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம ்.

பன்னாட்டு நிறுவனங்கள ், உள் நாட்டு பெரிய வர்த்த க, தொழில் நிறுவனங்கள ், மருந்து சில்லரை விற்பனையில் ஈடுபடம் முயற்சியை தடுக்கும் வகையில் நாங்கள் ஆரம்பத்தில் சங்கிலி தொடர் போல் மருந்து விற்பனை நிலையங்களை திறக்க போகின்றோம ். இதனால் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு பாதுகாப்பளிக்க முடியும ்.

எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஐந்தரை லட்சம் மருந்து விற்பனையாளர்கள் இணைந்து அகில இந்திய மருந்து விற்பனை நிறுவனத்தை துவக்கி உள்ளோம ். இது ர ூ.22 கோடி முதலீட்டில் துவக்கப்பட்டுள்ளத ு.

இதற்கு 22 மாநிலங்களில் துணை நிறுவனங்கள் உள்ள ன. இந்த சங்கத்தின் சார்பில் எல்லோரும் இணைந்து ர ூ.40,000 கோடி மதிப்பிற்கு மருந்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம ்.

இந்த நிறுவனத்தின் சார்பில் உயிர் காக்கும் மருந்துகள ், குறைந்த இலாபத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம ். மத்திய அரசு எல்லா மருந்துகளுக்கும் ஒரே மாதிரியான விலை நிர்ணயிக்க வேண்டும ். வரிகளையும் குறைக்க வேண்டும ்.

இது போல் மாநில அரசுகளும் நுழைவு வரியை நீக்க வேண்டும ். இந்த நடவடிக்கைகளை மத்தி ய, மாநில அரசுகள் எடுத்தால ், மருந்துகளை தற்போதைய விலையை விட 30 விழுக்காடுகள் குறைவாக விற்பனை செய்ய முடியும ்.

நாங்கள் நாடு முழுவதும் மொத் த, சில்லரை விற்பனை நிலையங்கள் அமைப்பதற்க ு, எங்களுக்கு ஆலோசனை கூற எர்ணஸ்ட் அண்ட் யெங் அண்ட் அஸின்டியூர் நிறுவனத்தை நியமித்துள்ளோம ். பல வங்கிகள ், விற்பனை நிலையங்களை திறக்க நிதி உதவி செய்ய முன்வந்துள்ளன என்று தெரிவித்தார ்.

இதன் கெளரவ செயலாளர் ஜ ே. எஸ ். சிண்டே கூறுகையில ், ஏற்கனவே எங்கள் சங்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில ், மகாராஷ்டிரா மாநில மருந்து விநியோகம் என்ற நிறுவனத்தை துவக்கியுள்ளத ு. இதன் அலுவலகம் மும்பையில் செம்பூர் பகுதியில் 12 ஆயிரம் சதுரஅடி பரப்பில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார ்.

இந்தியாவில் சுமார் 20 ஆயிரம் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ள ன. இவர்கள் வருடத்திற்கு ர ூ.50 ஆயிரம் கோடி மதிப்பிற்கு மருந்துகளை தயாரிக்கின்றனர ். இதில் ர ூ.18 ஆயிரம் கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற ன. மற்றவை உள்நாட்டில் விற்பனை செய்யப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி 2024! நாளை போக்குவரத்து மாற்றங்கள்:

தனியார்மயமாகிறதா ரயில்வே? மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுவது என்ன?

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

Show comments