Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை குறியீடு 17,000-ஐ தாண்டியது!

Webdunia
புதன், 26 செப்டம்பர் 2007 (12:59 IST)
மும்ப ை பங்குச ் சந்தை குறியீட்டு எண் இன்று காலை வர்த்தகத்தில் 17,000 புள்ளிகளைத் தாண்டியது.

நேற்று ( 25-09-06 ) காலையில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்ததால ், குறியீட்டு எண் 17,000- ஐ தாண்டிவிடும் என்ற எதிர்பார்க்கப்பட்டத ு. ஆனால் பிறகு மந்த நிலை நிலவியதால் 17,000- ஐ தொடவில்ல ை.

நேற்றைய எதிர்பார்ப்ப ு, இன்று நிறைவேறியத ு.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை சென்ற வாரம் குறைத்தத ு. அத்துடன் அமெரிக்காவில் சப் பிரைம் எனப்படும் மறு கடன் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளத ு. இதனால் முதலீட்டு நிறுவனங்கள ், ஆசிய சந்தைகளில் கவனம் செலுத்தி வருகின்ற ன.

இந்தியாவில் பணவீக்க விகிதம் குறைந்தது என அரசு அறிவித்த தகவல் மற்றும் இந்தியாவிற்கும ், அமெரிக்காவிற்கும் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை ஆதிரிக்கும் இடது சாரி கட்சிகளுக்கும ், அரசுக்கும் இடையே நிலவி வந்த பதட்டமான சூழ்நிலை மாறியுள்ளத ு. இதனால் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளத ு.

இது போன்ற காரணங்களினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள ், இந்திய பங்குச் சந்தையில் மீண்டும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர ். சென்ற வாரத்தில் இருந்து வெளிநாட்டு மூதலீட்டு நிறுவனங்கள ், பங்குகளை வாங்குவது அதிகரித்துள்ளத ு.

இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் துவக்கி ய, சில நிமிடங்களிலேயே 17 ஆயிரம் புள்ளியை தொட்டத ு. ( நேற்றைய இறுதி குறியீட்டு எண் 16969.45 புள்ளிகள ்) பங்குகளின் விலை ஏறுமுகமாக இருந்ததால ், 9 மணி 56 நிமிடங்களில் குறியீட்டு எண் 17 ஆயிரம் புள்ளிகளைத் தாண்ட ி, 17,013 புள்ளியைத் தொட்டத ு.

அதற்க ுப ்பின் பங்குகளின் விலைகள் சிறிது குறையத் துவங்கியத ு. 11 மணியளவில் 16,950 புள்ளியாக குறைந்தத ு.

இதே போல் தேசிய பங்குச் சந்தை எண் (நிப்டி) 5,000 புள்ளிகளை தாண்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தத ு. ஆனால் காலை நிலவரப்படி நிப்டி 4917.05 என்ற அளவில் இருக்கின்றது (நேற்றைய இறுதி நிலவரம் 4937.60 புள்ளிகள் )

இன்று குறியீட்டு எண் 17,000 ஆக உயர்ந்ததற்கு முக்கிய காரணம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகளின் விலைகளின் விலை உயர்வும ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ ், டாடா ஸ்டீல ், விப்ர ோ, ஹெச ். ட ி. எப ். ச ி, இன்போசியஸ ், ஐ. ச ி.ஐ. ச ி. ஐ வங்க ி, ஹூண்டால்க ோ, சிப்ல ா, பர்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வுதான ்.

கடந்த இரண்ட ு, மூன்று தினங்களாக தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்குகளின் விலைகள் இறங்கு முகமாக இருந்த ன. இன்று இந்த நிலை மாற ி, இந்த பிரிவு பங்குகளின் விலை அதிகரிக்கும் போக்கு காணப்பட்டத ு.

பங்குச் சந்தை குறியீட்டு எண் செப்டம்பர் 19-ம் தேதி 16,000 தாண்டியது நினைவில் கொள்ளத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

Show comments