Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச் சந்தை பின்னடைவு!

Webdunia
வியாழன், 20 செப்டம்பர் 2007 (15:28 IST)
மும்ப ை பங்குச ் சந்தையில ், இன்ற ு கால ை பங்க ு விற்பன ை தொடங்கியவுடன ், பங்க ு விற்பன ை மும்முரமா க இருந்தத ு. பங்குகளின ் வில ை உயர்ந்த ு காணப்பட்டத ு. இதனால் குறீயீட்டு எண் 16,368.57 புள்ளிகளைத் தொட்டத ு. ஆனால் சில நிமிடங்களிலேயே சரிய தொடங்கியத ு. இதற்கு முக்கிய காரணம ், அமெரிக்க ட ா லருக்கு எதிரான இந்திய ரூயாயின் மதிப்பு உயர்வதால ், தகவல் தொழில்நுட்ப பங்குகளின் விலை குறைந்தத ு. இதனால் காலையில் உயர்ந்த குறியீட்டு எண் சில நிமிடங்களிலேயே நேற்றைய நிலவரத்திற்கு வந்தத ு.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அரை விழுக்காடு குறைத்ததால ், நேற்று இந்தியா உட்பட ஆசிய பங்குச் சந்தைகளில் பங்குகளின் விலைகள் உயர்ந்த ன. இதனால் குறியீட்டு எண்ணும் அதிகரித்தத ு. இந்த போக்கு நீடிக்கவில்ல ை. இன்று மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியத ு.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 16,341.55 புள்ளிகளில் தொடங்கி ( நேற்றைய முடிவு 16,322.75 ) சில நிமிடங்களிலேயே 16,368.57 புள்ளிகளைத் தொட்டத ு. ஆனால் பங்குகளை விற்று இலாபம் பார்க்கும் போக்கால ், படிப்படியாக விலைகள் குறைந்து குறியீட்டு எண் 16,261.36 புள்ளிகளாக சரிந்தத ு. பிறகு 10.30 மணியளவில் 16,304.26 ஆக இருந்தத ு.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலை உயர்ந்தத ு. இதனால் நிப்டி குறியீட்டு எண் 4,750.15 புள்ளிகளை தொட்டத ு. பிறகு சரிந்து 10.30 மணியளவில் 4,730.40 புள்ளிகளாக இருந்தத ு. ( நேற்றைய முடிவு 4,732.35 ) தேசிய பங்குச் சந்தையிலும் டாலரின் மதிப்பு குறைந்ததால ், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் விலைகள் குறைந்த ு, குறியீட்டு எண் சரிய காராணமாக இருந்தத ு.

அந்நியச் செலவாணி சந்தையில் டாலரின் மதிப்பு ர ூ. 40 க்கும் குறைந்தத ு. இன்று ஒரு டாலரின் மதிப்பு ரூ 39.90 / 91 ஆக இருந்தத ு.

பெட்ரோலிய கச்சா எண்ணையின் விலை பீப்பாய் 82 டாலராக உயர்வ ு, இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும ், இடது சாரி கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்வது போன்ற காரணங்களும் பங்குச் சந்த ை, பாதிப்பதற்கும் காரணமாக உள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Show comments