Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேர்ல்பூல் குடி நீர் சுத்திகரிப்பு சாதனத்தை அறிமுகப்படுத்துகிறது!

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (20:03 IST)
வாஷிங் மெஷின ், ரெப்ரிஜியேட்டர் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் முண்ணனி நிறுவனங்களில் ஒன்றான வேர்ல்பூல் கார்ப்பரேஷன் குடி நீர் சுத்திகரிப்பு சாதனத்தை அறிமுகப்படுத்துகிறத ு.

ஃப்யூரா ப்ரஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தும ், இந்த குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் ரிவர்ஸ் ஓஸ்மாஸிஸ் எனப்படும் தொழில்நுட்ப முறையில் தண்ணீரை சுத்திகரிக்கும ்.

இந்தியாவில் குடி நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் வருடத்திற்கு ரூ 350 கோடி மதிப்பிற்கு விற்பனையாகின்ற ன. இதில் 25 விழுக்காட்டை கைப்பற்ற வேர்ல்பூல் திட்டமிட்டுள்ளத ு.

இதனை ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தி வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் தமல் காந்தி சாஹா பேசும் போத ு, 6 வது தலை முறை தொழில்நுட்பத்தால் இயங்கும் ஃப்யூரா ப்ரஸ் குடி நீர் சுத்திகரிப்பு சாதனம் ரிவர்ஸ் ஓஸ்மாஸிஸ் தொழில் நுட்பத்தில் இயங்குகிறத ு. இதனால் குடி நீரை 6 நிலைகளில் சுத்திகரிப்பதுடன ், கடைசி சொட்டு தண்ணீர் வரை சுத்தமாகவும ், குடிப்பதற்கு சுவையானதாகவும் இருக்கும ்.

இது காற்றுப்புகாத தொட்டியில் தண்ணீர் வைக்கப்படும் வகையிலும ், செராமிக் சுத்தப்படுத்தும் குழல் அமைக்கப்பட்டுள்ளத ு. இது தான் இந்தியாவில் தயாரிக்கப்படும் குடி நீர் சுத்திகரிப்பு சாதனங்களில ், முதலாவதாக அமெரிக்காவின் வாட்டர் குவாலிட்டி அசோசியனின் கடுமையான தர விதிகளுக்கு உட்பட்டது என்று கூறினார ்.

ஃப்யூரா ப்ரஸ்சில் ப்ளோரைட் கலந்துள்ள நீர் உட்பட இந்தியாவில் கிடைக்கும் எல்லா வகை தண்ணீரையும் சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளதா என இந்தியாவில் உள்ள முண்ணனி நீர் பரிசோதனை கூடங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளத ு.

தற்சமயம் ஆந்திர ா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளத ு. இது கூடிய விரைவில் மற்ற மாநிலங்களிலும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை சவக்கிடங்கில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பாலாஜி உடல்.. போலீஸ் பாதுகாப்பு..!

ஆப்பிரிக்காவில் நிலவும் கடும் பஞ்சம்! 200 யானைகளை கொன்று உணவாக்க திட்டம்! - ஜிம்பாப்வே எடுத்த முடிவு!

என்ன முடி இது..? ஒழுங்கா வெட்டிட்டு வா! திட்டிய பாட்டி! - சிறுவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!

22 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பரில் அதிக வெப்பம்! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

Show comments