Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின் விநியோகம் : இந்தோ ஆசியன் 25 கோடி முதலீடு!

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (15:31 IST)
மின் சாதனங்களை தயாரிக்கும் இந்தோ ஆசியன் ப்யூஸ்கியர் மின் விநியோகத் துறையில் இறங்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக இந்தோ ஆசியன் பவர் டிஸ்ட்ரிபிய ூ ஷன் அண்ட் இன ் ஃப்ராஸ்ட ் ரக்சர் லிமிடெட் என்ற பெயரில் புதிய நிறுவனம் துவக்குகின்றது.

இதன் ஆரம்பகட்ட முதலீடாக ர ூ.25 கோடி இருக்கும். இது உள் நிதியில் இருந்து திரட்டப்படும். இது ப்யூஸ் கியர் விற்பனை செய்வதுடன், மாநில மின் வாரியங்கள், மின் உற்பத்தி நிறுவனங்கள், மற்றும் மின் நுகவோர் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் மின் விநியோகிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இது ஆரம்பகட்டத்தில் உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின் விநியோகத் திட்டத்தில் இறங்க திட்டமிட்டுள்ளது.

மின் விநியோகத ் துறையின் எதிர்கால வாய்ப்புகள் பற்றி இதன் தலைவரும், செயல் இயக்குநருமான வி.பி. மகேந்திரு கூறுகையில், அரசு மின் துறை சீரமைப்புக்காக ரூ.35,000 கோடி ஒதுக்க உள்ளது. மின் விநியோகத்தில் பயன்படுத்தாத வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. நாங்கள் ஏற்கனவே மின்சாதனங்களை உற்பத்தி செய்து வருகின்றோம். நாங்கள் இதன் தொடர்புடைய மின் விநியோகத்தை துவக்குவது பொருத்தமானதே. இதன் வாயிலாக பல்வேறு விதமான சேவைகளை வழங்க முடியும். எங்கள் நிறுவனம் ஏற்கனவே மாநில மின் விநியோக வாரியங்களுடன் வர்த்தக தொடர்பில் உள்ளது. மின் விநியோகம் சீராக நடக்க உயர் அழுத்த மின் கருவிகளை அறிமுகப்படுத்தப் போகின்றோம். இது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

Show comments