பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி!

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2007 (17:44 IST)
அமெரிக்க கடன் சந்தையில் ஏற்பட்ட சரிவும், அதன் விளைவாக அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் பங்குகளை பெருமளவிற்கு விற்க முன்வந்தததன் காரணமாகவும் இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் இன்று பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தன!

இன்று ஒரே நாளில் மும்பை பங்குச் சந்தைக் குறியீடு 615 புள்ளிகள் சரிந்து 15,000க்கும் கீழ் இறங்கி 14,935.77 புள்ளிகளில் முடிந்துள்ளது.

ஒருகட்டத்தில் 14,910 புள்ளிகளுக்குச் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டிற்கு அடிப்படையான 30 பங்குகளின் விலைகளிலும் சரிவு ஏற்பட்டது.

தேச பங்குச் சந்தை 183 புள்ளிகள் குறைந்து 4,345.85 புள்ளிகளாக குறைந்தது.

அமெரிக்காவின் கடன் சந்தையில் ஏற்பட்ட தடுமாறலும், அதன் விளைவாக நியூயார்க் உள்ளிட்ட அந்நாட்டுப் பங்குச் சந்தைகளிலும், ஐரோப்பிய சந்தைகளிலும் ஏற்பட்ட சரிவே இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் போர்!.. ஒரு கோடி பேரை காப்பாத்தினேன்!.. டிரம்ப் ஆவேசம்....

போராடும் மக்களை விட சினிமா முக்கியமா?!.. முதல்வருக்கு சீமான் கேள்வி!...

பராசக்தி படத்துக்கு டிக்கெட் வேணுமா?!.. ஹெல்மேட் போட்டு வண்டி ஓட்டுங்க!....

கரூர் சிபிஐ விசாரணை!.. விஜயின் பிரச்சார வாகனத்தை ஓட்டி பார்த்து ஆய்வு..

பிங்கி பாங்கி போட்டு CM-ஐ செலக்ட் பண்ணுவீங்களா?!.. விஜயை அட்டாக் பண்ணும் அண்ணாமலை!..

Show comments