த‌மிழக‌த்‌தி‌ல் ‌கிளை பர‌ப்பு‌ம் யா‌த்ரா.கா‌ம்

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (15:26 IST)
யாத்ரா டாட் காம் நிறுவனம் ஆன்லைன் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு, ஹோட்டல் முன்பதிவு போன்ற பயண சேவைகளை அளித்து வருகிறது.

மாதந்தோறும் இந்நிறுவன வர்த்தகம் ரூ. 100 கோடி. இந்நிறுவன இணையதளத்தை தினசரி 80 ஆயிரம் பேர் பார்வையிடுகின்றனர்.

தற்போது இந்தியா முழுவதும் கிளை அலுவலகங்களை இந்நிறுவனம் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி சென்னை நுங்கம்பாக்கத்தில் முதல் கிளை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு பயணம் தொடர்பான அனைத்து சேவைகளும் கிடைக்கும்.

அடுத்த கட்டமாக திருச்சி, கோவை, மதுரை ஆகிய நகரங்களில் தலா ஒரு அலுவலகம் திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு அலுவலகமும் ரூ. 25 லட்சம் முதலீட்டில் உருவாக்கப்பட உள்ளன.

நிறுவன வர்த்தகத்தில் தமிழகத்தின் பங்களிப்பு தற்போது 10 சதவீதமாக உள்ளது. இதை 15 சதவீதமாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் வர்த்தகப்பிரிவுத் தலைவர் ஆசிஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த கேஸ்னாலும் எங்ககிட்ட வாங்க!. போலி ஆவணம் மூலம் ஜாமின் வாங்கி கொடுத்த கும்பல்!..

2026 புத்தாண்டின் முக்கிய நிதி மாற்றங்கள்: ஒரு பார்வை

எடப்பாடியின் தலைமையிலான கூட்டணியில் இணையவே மாட்டோம்.. ஓபிஎஸ், டிடிவி உறுதி..!

தமிழக அரசு `வாங்கிய கடன் ரூ.3,86,797 கோடி; மூலதன செலவுரூ.1.66 லட்சம் கோடி.. மீத்ஹி ரூ.2.2 லட்சம் கோடி எங்கே?' அன்புமணி கேள்வி!

248 கோடி மட்டுமே ஒதுக்கீடு!.. பொங்கல் பரிசில் பணம் இல்லயா?!...

Show comments