Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணினிக்கு இலவச க்ளீனிங்

Webdunia
எடை: 2.81 மெகாபைட ்
இயங்கும் தளங்கள்: விண்டோஸ ் 95 98 ம ீ, என்.டி. 2000 எக்ஸ ். பி.

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் பயன்படுத்த அதில் குப்பை சேர்ந்து விடுகிறது. போன வாரம் பார்த்த வலைப்பக்கங்கள் முந்தா நாள் பார்த்த வீடியோ எப்போதோ நீக்கி விட்ட சாஃப்ட்வேரின் ஷார்ட்கட்கள ், குக்கிகள ், ரெஜிஸ்ட்ரி தற்காலிக இணையக் கோப்புகள்... நம் கம்ப்யூட்டரில் ஒரு அண்டர்கிரவுண்ட் குப்பைத் தொட்டியே இருக்கிறது.

மேற்படி லிஸ்ட்டில் கடைசியாகச் சொன்னதை Temporary Internet File s என்ற ஃபோல்டருக்குப் போய் அழிக்கலாம். பழைய வலைப்பக்கங்களை பிரவுசரில் நீக்கலாம். ரெஜிஸ்ட்ரியில் கை வைப்பது கொஞ்சம் ரிஸ்க். ஆனால் ஒவ்வொரு குப்பையையும் நீக்க ஒவ்வொரு இடத்திற்குப் போக வேண்டியிருக்கிறது.

‘எதற்கு வீண் சிரமம ்?‘ என்கிறது ஈஸி க்ளீனர்.

டிஜிட்டல் குப்பையை அழிப்பதற்கு ஈஸி க்ளீனர் மாதிரி ஒரு புரோகிராம் இல்லை. பட்டனை ஒரு க்ளிக் செய்து வேலையை முடிக்க உதவும் எளிமையான வடிவமைப்பு. ஈஸி க்ளீனர் தான் அழித்ததை தற்காலிகமாக சேமித்து வைப்பதால் தொலைந்த ஃபைல்களை மீட்கவும் இதில் வழி உண்டு. எந்த சிரமமும் தராமல் ரெஜிஸ்ட்ரியை சுத்தமாக்குவது தான் இந்த புரோகிராமின் மிகப்பயனுள்ள அம்சம்.

ஆனால் Duplicates, Unnecessar y ஆகிய வசதிகளை கவனத்துடன் பயன்படுத்துங்கள். மற்றபடி இது ஒவ்வொரு கணினியிலும் இருக்க வேண்டிய மென்பொருள்.

தகவல்: < http://personal.inet.fi/business/toniarts/ecleane.htm>
டவுன்லோட் முகவரி: < http://personal.inet.fi/business/toniarts/files/EClea2_0.exe>
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments