Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மிக மெல்லிய தடிமன் கொண்ட மொபைல் போன்

Webdunia
வியாழன், 20 மார்ச் 2014 (19:48 IST)
உலகிலேயே மிக மிகக் மெல்லிய தடிமனுடன் வடிவமைக்கப்பட்ட மொபைல் போன், இம்மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது.
FILE

ஜியானி இ லைப் எஸ் 5.5 ( Gionee Elife S 5.5) என அழைக்கப்படும் இந்த மொபைல் போன், சென்ற பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது சீன நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும். சீனாவில் சென்ற பிப்ரவரியில் 3ஜி போனாக இது அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த நாட்டில் குறிக்கப்பட்டுள்ள விலையின் படி பார்த்தால், இதன் இந்திய மதிப்பு ரூ.22,500 ஆக இருக்கும். ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வரும் போதுதான் இதன் விலை தெரியவரும். மார்ச் 30 மற்றும் 31 அன்று, கோவா மாநிலத்தில் இதன் இந்திய அறிமுகம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதுவரை மிக மெல்லிய தடிமன் கொண்ட போனின் அளவு 7.6 மிமீ ஆகும். இது ஐபோன் 5எஸ் ஆகும். இதனுடன் ஒப்பிட்டு வர இருக்கும் ஜியானி இ லைப் போன் 5.5 மிமீ உடன் எப்படி இருக்கும் என எண்ணிப் பார்க்கலாம். இதன் தடிமன் குறைவாக இருந்தாலும், வேறு வசதிகளைத் தருவதில் இது சோடை போகவில்லை. இதன் திரை 5 அங்குல அகலத்தில் உள்ளது.

ஆண்ட்ராய்ட் அடிப்படையிலான அமிகோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதன் ஆக்டா கோர் ப்ராசசர் 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. இதன் ராம் மெமரி 2 ஜி.பி. கேமரா 13 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது.

முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. 2300 mAh திறன் கொண்ட பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. 3ஜி மற்றும் 4ஜி அலைவரிசைகளுக்கென தனித்தனி மாடல் போன்கள் வெளியாகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: ஈபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

மூன்று பேர் வெளியே.? மூன்று பேர் உள்ளே.? தமிழக அமைச்சரவை நாளை மாற்றமா.?

இந்து கோவில் அதிகாரிகள் பணி, இனி இந்துகளுக்கு மட்டுமே: சந்திரபாபு நாயுடு

3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு

அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுக.! மக்கள் மீதான அக்கறை இவ்வளவு தானா? அன்புமணி கண்டனம்.!!

Show comments