Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூட்யூப் வீடியோவை தரவிறக்கம் செய்வது எப்படி?

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2014 (19:42 IST)
நமக்கு இணையத்தில் ஏதாவது வீடியோவைப் பார்க்க வேண்டும் என்றால் உடனே யூட்யூப் என்ற வலைத்தளத்துக்குத்தான் செல்வோம். அந்த வீடியோவைப் பார்த்த உடனே அதை நமது கம்ப்யூட்டரிலோ அல்லது டேப்லட்டிலோ தரவிறக்கம் செய்யலாம் என்று தோன்றும். ஆனால் அதை எப்படி தரவிறக்கம் செய்வது என்று நமக்குத் தெரியாமல் தேவையான வீடியோக்களையும் விட்டுவிடுவோம்.
FILE

உண்மையில், யூட்யூப் வீடியோகளை தரவிறக்கம் செய்வது சுலபமானது. தற்போது மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸில் எப்படி தரவிறக்கம் செய்வது என்பதைப் பார்ப்போம். அதில் ஆட் ஆன் ( Add-On) மெனுவிற்குச் சென்று Easy Youtube Video Downloader ஐ தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தற்போது யூட்யூப் வீடியோக்களைக் காணும் போது, டவுன்லோடு என்ற ஆப்ஷன் தெரியும். அதை கிளிக் செய்து வீடியோ முறையைத் தேர்வு செய்து தரவிறக்கம் செய்ய வேண்டியதுதான்.

இதுபற்றிய வீடியோ செய்முறை:


மற்றொரு முறை:
FILE

www.real.com என்ற வலைத்தளத்திற்குச் சென்றோ அல்லது ஆண்ட்ராய்ட் மூலமாகவோ Real Playe rஐ தரவிறக்கம் செய்துகொள்ளவும். பிறகு யூட்யூப் வீடியோக்களைப் பார்க்கும் போதெல்லாம் Download this Video என்ற ஆப்ஷன் காட்டும். அதை கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆனால் flv Format மூலமாக மட்டுமே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக: ஈபிஎஸ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

மூன்று பேர் வெளியே.? மூன்று பேர் உள்ளே.? தமிழக அமைச்சரவை நாளை மாற்றமா.?

இந்து கோவில் அதிகாரிகள் பணி, இனி இந்துகளுக்கு மட்டுமே: சந்திரபாபு நாயுடு

3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு

அணுக்கனிம சுரங்கம் அமைக்கும் முடிவை கைவிடுக.! மக்கள் மீதான அக்கறை இவ்வளவு தானா? அன்புமணி கண்டனம்.!!

Show comments