Webdunia - Bharat's app for daily news and videos

Install App

PlayStation-3 வீடியோ கேம்: விலையை குறைத்தது சோனி

Webdunia
புதன், 19 ஆகஸ்ட் 2009 (18:02 IST)
உலகளவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின் காரணமாக வீடியோ கேம் உள்ளிட்ட கணினி தொடர்பான விளையாட்டு உபகரணங்களின் விற்பனை கணிசமாகக் குறைந்தது.

இதையடுத்து குறைந்த லாபத்தை கருத்தில் கொண்டு PlayStatio n-3 வீடியோ கேம் பொருட்களின் விலையை ஜப்பானிய நிறுவனமான சோனி கணிசமாகக் குறைத்துள்ளது.

டோக்கியோவில் PlayStatio n-3 வீடியோ கேமின் மேம்பட்ட பதிப்பை வெளியிட்ட சோனி கம்ப்யூட்டர் என்டர்டெய்ன்மென்ட் தலைவர், இந்த புதிய பதிப்பு செப்டம்பர் 3ஆம் தேதி முதல் ஜப்பானில் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தார்.

தற்போது புழக்கத்தில் உள்ள PlayStatio n-3 வீடியோ கேம் 80 ஜிகா பைட் மெமரி கொண்டது. ஆனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள PlayStatio n-3ல் 120 ஜிகா பைட் மெமரி உள்ளது.

இதுமட்டுமின்றி PlayStatio n-3 வீடியோ கேமின் தற்போதையை விலையை 100 டாலர்கள் வரை குறைத்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அமெரிக்காவில் 399 டாலர்களுக்கு விற்கப்படும் PlayStatio n-3, இனி 299 டாலர்களுக்கும், ஐரோப்பாவில் 399 யூரோவில் இருந்து 299 யூரோவாகவும் விற்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

Show comments