Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் டெலி மெடிசன் சேவை துவக்கம்

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (17:22 IST)
ஆந்திர மாநிலத்தில் கிராமப்புற பகுதிகளுக்கும் மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அம்மாநில அரசு புரட்சிகரமான நடவடிக்கையாக `104 ஃபிக்சடு டே ஹெல்த் சர்வீசஸ்' ( FDHS) வசதியைத் தொடங்கியுள்ளது.

ராஜீவ் ஆரோக்யஸ்ரீ சுகாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழை மக்களுக்கான இந்த தொலைதூர மருத்துவ சேவை வசதியை முதல் அமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி தொடங்கி வைத்தார்.

பொது சுகாதார மையங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டு வாழும் மக்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும், சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த சுகாதாரா மேலாண்மை முறையில் இந்த சேவை வழங்கப்படுவதாக முதல்வர் கூறினார். இந்த டெலி மெடிசன் வசதியை சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உருவாக்கியுள்ளது.

இந்த சேவையின் கீழ் மருத்துவ சேவை வழங்கப்படும் மக்களுக்கு ஒரு மாத காலத்திற்கு இலவச மருந்து, மாத்திரைகள் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது ஆந்திராவின் மெஹபூப் நகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த வசதி, ஸ்ரீகாகுளம், அடிலாபாத், கடப்பா ஆகிய மாவட்டங்களில் அடுத்த மாதம் முதல் தொடங்கப்படும் என்றும் தெரிவித்த ராஜசேகர ரெட்டி, மாநிலம் முழுவதும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் டெலி மெடிசன் சேவை அளிக்கப்பட்டு விடும் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments