Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌ரிசோதனை‌யி‌ல் லினக்ஸ் செல்பேசிகள்!

Webdunia
புதன், 16 ஜூலை 2008 (15:22 IST)
செல்பேசியில் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டம் தற்போது பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை கலிஃபோர்னியாவில் உள்ள அஸிங்கோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

இந்த லினக்ஸ் பயன்பாட்டு செல்பேசிகள் முதலில் ஐரோப்பிய சந்தைகளில் 2009-ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இ‌ந்த வச‌தி கொ‌ண்ட செ‌ல்பே‌சிக‌ள் இந்தியாவில் 2010ஆம் ஆண்டு முதல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது பரிசோதனை மாதிரி செல்பேசிகளை வெளியிட்டுள்ள அஸிங்கோ நிறுவனத்தின் உயரதிகாரி இது பற்றி கூறுகையில், இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளாகவே ஆய்வில் இருந்து வந்ததுதான் என்றும், இதன் முதல் வணிக அனுப்பீடு ஐரோப்பிய சந்தைகளுக்க ு செல்கிறது என்றார்.

இதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு புனே மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள அஸிங்கோ மையங்களில் நடைபெற்றது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மற்றும் பயன்பாடுகளை தயாரிப்பவர்கள் ஆகியோர், "சி" சி++ மென்பொருளில ் அப்பளிகேஷன்களை உருவாக்கவும், ஜாவா, ஜாவா ஸ்க்ரிப்டை பயன்படுத்தி வெப் அப்ளிகேஷன்களை உருவாக்கவும் வசத ி அமைத்துத் தரப்படும் என்று அஸிங்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் லினக்ஸ் பயன்பாட்டு செல்பேசிகளுக்கான தேவை 2 பில்லியன்களுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments