Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டிற்கு தொகை வசூலிக்கப்படும்!

Webdunia
செவ்வாய், 15 ஜூலை 2008 (12:55 IST)
புது டெல்லி: பார்தி ஏர்டெல், வோடஃபோன் எஸ்ஸார், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அளவைக் காட்டிலும் அதிகமாக பயன்படுத்தி வருவதால் இந்த நிறுவனங்களிடமிருந்து கூடுதல் தொகையை தொலைத் தொடர்புத் துறை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2- ஜி செல்லுலார் சேவையில் உரிமம் வழங்கப்பட்டுள்ள 6.2 மெகாஹெர்ட்ஸை விடவும் இந்த நிறுவனங்கள் அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் ஸ்பெக்ட்ரம் அளவை பயன்படுத்தி வருகின்றன.

இது குறித்து தொலைத் தொடர்புத் துற ை, செல்பேச ி தொழிற்துறையைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் நேற்று கலந்தாலோசனை செய்தது. பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு அதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 12 மெகாஹெர்ட்ஸ் வரையிலும் ஸ்பெக்ட்ரம் அளவு பய‌ன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது.

இதனால் இந்த செல்பேசி சேவை நிறுவனங்கள் ஒவ்வொன்றும ் ரூ.1,600 கோடி தொலைத் தொடர்புத் துறைக்கு செலுத்த வேண்டியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடைய ே ஜி.எஸ்.எம். சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்ட 6.2 மெகாஹெர்ட்சைக் காட்டிலும் அதிகமாக பயன்படுத்த அனுமதித்தது ஏன் என்று தலைமை கண்காணிப்ப்பு ஆணையம் தொலைத் தொடர்புத் துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்: நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் தீர்மானம்!

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!

இனிமேல் கள்ளச்சாராய உயிர் பலி நடந்தால் மாவட்ட காவல் அதிகாரிகளே பொறுப்பு: முதல்வர் ஸ்டாலின்

டாஸ்மாக் மதுபானத்தில் கிக் இல்லை! சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேச்சு!

Show comments