Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகவல் தொழில்நுட்ப தொழில் முனைவோருக்கு விருது!

Webdunia
செவ்வாய், 18 செப்டம்பர் 2007 (13:54 IST)
தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை துவக்கி, வெற்றிகரமாக நடத்திவரும் சிறந்த தொழில் முனைவோருக்கு சாதனை விருது வழங்கப்பட்டது!

இந்த விருதை ஐ.சி.ஐ.சி.ஐ வென்சர் நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நடைபெற்றுவரும் கனெக்ட் - 2007 கருத்தரங்கில் இவ்விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த ரெடிங்டன் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் எம். சீனிவாசனுக்கு, இந்திய அளவில் தகவல் தொழில்நுட்ப துறைக்கு தேவையான பொருட்களை சிறந்த முறையில் விநியோகித்ததற்காக விருது வழங்கப்பட்டது.

ஆசெல் இந்தியா நிறுவனத்தின் தலைவர் என்.ஆர். பணிக்கர், ஜூலை சிஸ்டம் நிறுவனத்தின் இணை நிறுவனரும், இதன் தலைவருமான அசோக் நரசிம்மன் ஆகியோருக்கு சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்பட்டது.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் வேந்தர் டி.ஆர். பச்சமுத்து தகவல் தொழில் நுட்ப எக்கோ சிஸ்டத்தை செயல்படுத்தியதற்காக சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்பட்டது.

இந்தியாவில் ஊழலை எதிர்த்து போராடியதற்காக வாழ்நாள் சாதனை விருது மத்திய ஊழல் தடுப்பு முன்னாள் ஆணையர் என். விட்டலுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதுகளை ஹிந்து பத்திரிக்கையின் ஆசிரியர் என். ராம் வழங்கினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments