Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் வழங்கும் பர்ஸனலைஸ்ட் இணையப் பக்கம்

Webdunia
யாஹ ூ, மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்களைப் போன்றே கூகுள் நிறுவனமும் வலைவாசிகள் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் இணையப் பக்கங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியை அளிக்கிறது. எனினும் கூகுள் தேடுதல் இயந்திரமே பிரதான இடத்தில் இருக்கும். செய்திகள ், தினம் ஒரு தகவல ், ஜி மெயில்...என்று உங்களுக்குத் தேவையான அம்சங்களை பிடித்தமான வகையில் அமைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இணையப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை இடமாற்றம் செய் ய, மவுஸை அழுத்தி விரும்பிய திசையில் இழுத்தால் போதும். திருத்தியமைக்கவும் சம்பந்தப்பட்ட அம்சங்களின் அருகிலேயே எடிட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதியால் கூகுள் இணையதளத்தை ஒரு போர்ட்டல் வெப்சைட்டாக்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தற்போது சோதனை அடிப்படையிலேயே இந்த முயற்சி வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஜி மெயில் வசதியைப் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் மட்டுமே இந்த வசதியைப் பரிசோதிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் தேடுதல் இயந்திரத்தை நாடும் வலைவாசிகள ், முகப்புப் பக்கத்தில் சற்று கூடுதல் நேரத்தை செலவழிக்க இந்த வசதி உதவும் என கூகுள் நம்புகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments