Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுளின் இணைய நூலக வசதிக்கு எதிர்ப்பு

Webdunia
பல்கலைக் கழகங்களின் நூலகங்களில் உள்ள நூல்கள் அனைத்தையும் இணையத்தில் பதிப்பிக்கும் கூகுள் நிறுவனத்தின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு வலுக்கிறது. கூகுளின் இந்த முயற்சியால் தாங்கள் ஏராளமான பொருளிழப்புக்கு உள்ளாகியிருப்பதாக அமெரிக்க பதிப்பகங்களின் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

கூகுள் நிறுவனம் காப்புரிமைச் சட்டங்களை அப்பட்டமாக மீறி வருகிறது என்று குற்றம் சாட்டும் இந்த அமைப்ப ு, இதனால் வெளியீட்டாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாக கூகுள் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு உலகின் மிகப் பெரிய 4 பல்கலைக் கழக நூலகங்களுடன் கூகுள் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

சுமார் 15 மில்லியன் வால்யூம் அளவிலான பக்கங்களை இணையத்தில் பதிப்பிக்கும் இமாலய முயற்சியில் இறங்கியுள்ள கூகுள் நிறுவனம் அதற்கென 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.

ஸ்டேன்ஃபோர்ட ், மிச்சிகன ், ஹார்வர்ட் பல்கலைக் கழகங்கள் மற்றும் நியூயார்க் பொது நூலகம் என அமெரிக்காவின் 4 முன்னணி நூலகங்களுடனான இந்த திட்டம் 2015-ம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments