Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகவல் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப பொறியியல் கல்வியில் மாற்றம்

Webdunia
பொறியியல் கல்வியை தகவல் தொழில் நுட்பத் துறைக்கு ஏற்றதாக மாற்றியமைக்க வேண்டியது அவசியம் என்று நேஸ்காம் தலைவர் கிரன் கார்னிக் தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டிணத்தில் திங்களன்று நடைபெற்ற நேஸ்காம் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர ், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் ஒரு குறிப்பிட்ட திறனை வளர்ப்பதோடு மட்டுமல்லாது புதுமையான கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்குவதை ஊக்கப் படுத்தும் விதத்தில் பாடத் திட்டங்களை வகுக்க வேண்டும்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் புதிது புதிதாகப் பல மாற்றங்கள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்று புதிதாய்த் தோன்றும் ஒரு தொழில் நுட்பம ், மிகக் குறுகிய கால இடைவெளியில் காலாவதியாகி உயர் தொழில் நுட்பம் அறிமுகமாகி விடுகிறது.

இத்தகைய மாறுதலுக்கு மாணவர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும ், புதுமையாக சிந்தித்து செயலாற்றவும ், வெற்றிகரமாகத் திகழவும் வழிகாட்டுவது அவசியம். ஒரு குறிப்பிட்ட துறையில் திறன் பெறுவதோடு நின்று விடாத ு, தொடர்ச்சியாகப் புதிய விஷயங்களைக் கற்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்கு உணர்த்துவது நம் கடமையாகும்.

தகவல் தொழில் நுட்பத் துற ை, கல்வி நிறுவனங்கள ், அரசு என அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து இதற்கான முன்முயற்சியில் ஈடுபடுவது அவசியம் என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநரின் விளக்கம் சில நிமிடங்களில் நீக்கம்..!

சட்டமன்றத்தில் உரையாற்றவில்லை.. மூன்றே நிமிடத்தில் புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

Show comments