ஆபாச தளங்களில் இருந்து சிறுவரை காக்க புதிய யோசனை

Webdunia
ஆபாச இணைய தளங்களை சிறுவர்கள் பார்க்கா வண்ணம் தடுக்க ஒரு புதிய யோசனை வடிவம் பெற்று வருகிறது. அதாவது . com, .net, .or g என்று இருப்பது போல . xx x என்ற களப்பெயரினை உருவாக்க ப்ளோரிடாவில் இருந்து ஒருவர் விண்ணப்பத்திருப்பதை அடுத்து இணையதளங்கள் பெயரிடலுக்கான சர்வதேச அதிகாரபூர்வ அமைப்பான ICAN N இந்த விஷயத்தை ஆலோசித்து வருகிறது.

அதாவது ஆபாச தளங்களை உருவாக்குவோர் தங்கள் தளங்களின் பெயர் விரிவை . xx x என்று அமைத்து கொள்ளும் பட்சத்தில் தங்கள் குழந்தைகள் இந்த இணைய தளங்களை பார்வையிடுவதை மென்பொருள் மூலமாக பெற்றோர்கள் தடுக்க முடியும்.

இருப்பினும் இது தளங்களுக்கு பெயரிட விரும்புவோரே முடிவு செய்யக் கூடிய விஷயமாகும். அதாவது . xx x என்ற கள விரிவுடன் இருக்கும் இணையதளங்களில் ஆபாசம் இருக்கும் என்று சொல்ல முடியுமே தவிர அந்த விரிவு இல்லாத தளங்களில் ஆபாசமே இருக்காது என்ற உத்தரவாதத்தினை நம்மால் கொடுக்க முடியாது. எனினும் இந்த யோசனை ஆபாச இணைய தளங்களில் இருந்து சிறுவரை காப்பாற்ற வேண்டும் என்று குரல் கொடுக்கும் ஏராளமான பெற்றோர்களுக்கு ஒரு சரியான திசையிலான நம்பிக்கையூட்டும் செய்தியாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தம்பி விஜய் எனக்கு எதிரி இல்லை!... திடீர் டிவிஸ்ட் கொடுத்த சீமான்...

கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் விபரீதம் ஏற்படும்.. ட்ரம்ப்க்கு டென்மார்க் எச்சரிக்கை...

ஜனவரியில் நல்ல மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!