Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடனுக்கான வட்டியை ரிசர்வு வங்கி குறைக்கும் - ஆனந்த்சர்மா நம்பிக்கை

Webdunia
புதன், 26 மார்ச் 2014 (17:27 IST)
ரிசர்வு வங்கி, வளர்ச்சியை ஊக்குவிப்பற்காக கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்பு உள்ளது என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த்சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
FILE

பணவீக்கம் குறைந்து வரும் நிலையில் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும் நடவடிக்கையில் ரிசர்வு வங்கி கவனம் செலுத்தும். அந்த வகையில் ஏப்ரல் 1ஆம் தேதி நடைபெற உள்ள காலாண்டு நிதிக்கொள்கையின்போது வட்டி குறைப்பு அறிவிப்பை ஆர்பிஐ வெளியிடலாம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

கடனுக்கான வட்டி விகிதத்தை கடந்த ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற காலாண்டு நிதிக் கொள்கையின்போது 7.75 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக ரிசர்வு வங்கி உயர்த்தியது. பிப்ரவரி மாதத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் ஒட்டுமொத்த விற்பனை விலை அட்டவணையின்படி 4.68 சதவீதமாகக் குறைந்தது. கடந்த 9 மாதங்களில் பிப்ரவரி மாதத்தில்தான் 5 சதவீதத்துக்குக் கீழ் பணவீக்கம் குறைந்துள்ளது. இதேபோல சில்லறை வர்த்தகத்தின் பணவீக்கம் கடந்த 25 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.1 சதவீதமாகக் குறைந்தது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த நிதி ஆண்டில் (2012-13) கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 4.5 சதவீத அளவுக்குச் சரிந்தது. நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி 4.9 சதவீத அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய பொருளாதார வளர்ச்சி ஒரு காலத்தில் 9 சதவீத அளவுக்கு உயர்ந்திருந்தது. அத்தகைய வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டுக்கான வளர்ச்சி மிகவும் குறைவானதாகும். பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டுமானால் தொழில் துறைக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோரி வருகின்றனர்.

வட்டி குறைப்பு நடவடிக்கைகளுக்கு , தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போதும் தேர்தல் ஆணையத்தின் அனும தியை பெற வேண்டிய தேவை இல்லை இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கிக்கு முழு உரிமை உள்ளது என்றார்.ரிசர்வு வங்கியின் காலாண்டு நிதிக் கொள்கை என்பது அரசியல் சாசன விதிமுறைகளுக்குள்பட்டது என்று சர்மா சுட்டிக் காட்டினார்.

தனியார் நிறுவனங்கள் வங்கி தொடங்கு வதற்கான உரிமம் வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதியை ரிசர்வு வங்கி எதிர் நோக்கியுள்ளது. இந்நிலையில் காலாண்டு நிதிக்கொள்கை அறிவிப்புகளுக்கு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆனந்த்சர்மா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

அண்ணாமலை பப்ளிசிட்டிக்காக பண்ணியிருப்பார்.. மாணவி வன்கொடுமையில் சிபிஐ விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்!

கொட்டும் மழை.. 20 மணி நேரத்திற்கும் மேலாக தரிசனத்திற்கு காத்திருக்கும் திருப்பதி பக்தர்கள்!

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா வலைதளம் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு!

சூரியனுக்கு மிக அருகில்.. நாசாவின் விண்கலம் புதிய சாதனை!

Show comments