Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஷெவர்லே பீட்..! இப்போது இன்னும் சிறியதாய்..!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2014 (18:28 IST)
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் புதிய ஷெவர்லே பீட் ஹேட்ச் பேக்கை (பேஸ் லிப்ட்) சமீபத்தில் வெளியிட்டது. நான்கு ட்ரிம்களான பிஎஸ், எல்எஸ், எல்டி., மற்றும் எல்டி(ஓ) என்றும் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி., தேர்வுகளிலும் புதிய பீட் கிடைக்கிறது.
FILE

புதிய பீட்டின் வெளிப்புறத் தோற்றத்தில் கவனிக்கும் படியான மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. முன்புறம் அகலமாக தெரிவதும், பின்புறமாக சரிந்த கூரையும், அதன் மீது இருக்கும் ரெப்லிங்குகளும், கவர்ச்சியான, சுவாரசியமான அம்சங்களாக தெரிகின்றன.

இரண்டு கதவுகள் போன்ற தோற்றத்தைக் கொடுப்பதற்காக, பின்புற கதவின் பிடிகளை, "சி' பில்லரில் மறைவாக அமைத்திருக்கின்றனர். இதனால் பின்புற ஜன்னல்களின் அளவு சற்றே குறைந்திருக்கிறது என்றாலும், பக்கவாட்டுத் தோற்றம் மிக நேர்த்தியாகவே உள்ளது. உட்புறம் டேஷ்ஷில் உள்ள சென்டர் கன்சோல், இரட்டையாக கொடுக்கப்பட்டுள்ளதும், பியானோ கறுப்பிலான நிறமும் கவர்ச்சியாக உள்ளது.

சீட்களின் தரமும், வடிவமைப்பும் புதிய பீட்டில் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய பீட்டில் பின்புற இருக்கைகளின் நடு இருக்கைக்கு ஹெட் ரெஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
FILE

நகரப் போக்குவரத்தில் நீந்திச் செல்வது இந்தக் காரில் சுகமான அனுபவமாகவே உள்ளது. திருப்பங்களில் சிரமமின்றி திரும்பவும் சுலபமாக உள்ளது. நெடுஞ்சாலைப் பயணங்களில் நீண்ட தூரம் செல்லும்போது, சற்றே களைப்பை ஏற்படுத்தினாலும், இந்த செக்மன்ட் கார்களுடன் ஒப்பிடுகையில், இதன் பயணம் நன்றாகவே உள்ளது எனலாம். கையாள சுலபமாக இருப்பதும், இதற்கு ஒரு காரணமாகக் கூறலாம்.

என்ஜின், செயல்திறன் போன்றவைகளில் புதிய பீட்டில் எந்த மாற்றங்களும் இல்லை. 12 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 10 லிட்டர் டீசல் இன்ஜின் மற்றும் எல்பிஜி எரிபொருள் தேர்வுகளில் பீட் கிடைக்கிறது. ஐந்து வேக மானுவல் கியர் மாற்றத்துடன் வருகிறது பீட். அதிகமான எரிபொருள் திறன் கொண்ட கார் என்ற பெருமையை பெற்றது ஷெவர்லே பீட்.

வாடிக்கையாளர்களின் பெருமைக்கு காரணமாக விளங்கும் புதிய பீட், புதுமையான ஸ்டைல், சிறப்பான எரிபொருள் திறன், சொகுசான அம்சங்கள் மற்றும் நியாயமான விலை என்ற சிறப்புகளையெல்லாம் உள்ளடக்கியத ு.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?

வன்கொடுமைக்கு ஆளான மாணவிக்கு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம்! - நீதிமன்றம் உத்தரவு!

பாமகவில் வெடித்த மோதல்? மேடையிலேயே ராமதாஸ் - அன்புமணி வாக்குவாதம்! - என்ன நடந்தது?

இன்றைக்கும்.. என்றைக்கும்.. நீ எங்கள் நெஞ்சத்தில்..! - கேப்டன் விஜயகாந்திற்கு மு.க.ஸ்டாலின், கமல், ரஜினி நினைவஞ்சலி!

மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடக்கம்! - பின் தொடரும் காங்கிரஸ் பிரமுகர்கள்!

Show comments