Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்திற்கான காரணங்களைக் கூறும் கறுப்பு பெட்டி இப்போது காரிலும்!

Webdunia
செவ்வாய், 1 அக்டோபர் 2013 (16:16 IST)
கறுப்பு பெட்டி என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, அது விமானத்தில் இருக்கும் என்றுதான். அந்த கறுப்பு பெட்டி இப்போது, பேருந்து மற்றும் கார் போன்ற வாகனங்களுக்கும் பொருத்தப்பட உள்ளது.
FILE

விமானத்தில் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால், அந்த விபத்து குறித்த முக்கிய தகவல்களை நிஜத்தை கூறும் கருவியாக இருப்பதுதான் கறுப்பு பெட்டி. கறுப்பு பெட்டி என்பது, "ஈவென்ட் டேட்டா ரெக்கார்டர்" அதாவது, நடந்த நிகழ்வுகளை பதிவு செய்ய பயன்படுவது. இது தற்சமயம் கார்களில் வரப்போகிறது என்பது ஆச்சரியமான விஷயம். இதன் மூலம், கார்களில் ஏற்படும் விபத்துகளின் உண்மையான காரணம், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உண்மையை விளக்கும் கருவியாக, போலீஸ் விசாரணையின்போது நீதிமன்றங்களில், கறுப்பு பெட்டி ஓர் சாட்சியாக செயல்படக்கூடிய முக்கியமான கருவி ஆகும்.

காரில் கறுப்பு பெட்டி பொருத்துவதன் பயன் குறித்த ஆய்வில், கறுப்பு பெட்டி பொருத்திய கார்களில், ஓட்டுனர்களால் 10 சதவீதம் அளவு விபத்துகள் குறைந்துள்ளது என அறியப்பட்டுள்ளது.

காரில் பொருத்தப்படக்கூடிய கறுப்பு பெட்டிகள் 1996ல் பொருத்தப்பட்டுவிட்டன. ஆனால், அது குறித்து போதிய விஷயம் மக்கள் அறியவில்லை. இன்றைய அயல்நாட்டில் ஓடும் 75 சதவீதத்திலான கார்களில் இந்த கறுப்பு பெட்டி உள்ளன. கறுப்பு பெட்டிகள் வேறு காரணத்திற்கு காரில் அமைக்கப்பட்டது.

ஏர்பேக் செயல்படும் விதத்தை ஆராயும் நோக்கில் கறுப்பு பெட்டி முதன்முதலாக பயன்படுத்தப்பட்டன. பின், அதுவே காரின் முக்கிய தகவல் கருவியாக வடிவமைக்கபட்டுவிட்டது. காரில் இருக்கும் கறுப்பு பெட்டி மூலம் காரின் வேகம், சமீபத்திய இயக்கம், ஓட்டுனர் பிரேக் போட்ட விதம், கொடுத்த சமிக்ஞைகள் போன்ற 20 வகையான புள்ளி விவரங்கள் பதிவாகும். மோதல்கள் ஏற்படுவதற்கு 5 முதல் 10 நிமிடங்கள் முன்னரே கறுப்பு பெட்டி பதிவுகள் நடைபெறும். இந்த கறுப்பு பெட்டி தகவல்களை குறியீடுகள் வழியாக தெரிவிக்கும் என்றாலும், வீடியோ மூலம் பதிவு செய்து தெரிவிக்கும் என்றவாறும் உள்ளன.

வீடியோ மூலம் பதிவு செய்து தரும் கறுப்புப் பெட்டிகள் கூடுதல் சிறப்பு தன்மை கொண்டவை. இந்த வீடியோ பதிவிலான கறுப்பு பெட்டி, விண்ஷீல்டு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் உள்ள கேமரா மூலம் தகவல்கள் சேகரிக்ப்பட்டு ஜி.பி.எஸ்., உதவியுடன் கணினி ஒத்துழைப்புடன் பதியப்படும். ஆக்சிலேட்டர் கொடுப்பது, பிரேக் பிடிப்பது, வளைப்பது முதற்கொண்டு அனைத்தும் இதில் பதிவாகும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள் உடனக்குடன் தானாகவே அதில் உள்ள, "செக்யூர் டிஜிட்டல் கார்டில்" சேமிக்கப்பட்டு விடும்.

வீடியோ அடிப்படையிலான இந்த வகை கறுப்பு பெட்டி மூலம், மிகத்துல்லியமாக நேரம், இடம், வாகன இயக்கத்தின் போது, திசை, வாகன ஓட்டுனரின் பார்வை போன்றவை பதியப்படுகின்றன. இந்த பதிவுகள் மூலம், விபத்தின் தன்மையை அறிய உதவுகிறது. இதில் ஏதேனும், அதாவது வாகனம் மஞ்சள் விளக்கு எரிந்தபோது சென்றதா, சிவப்பு விளக்கு எரிந்தபோது கடந்து வந்ததா என்பதை கூட தெளிவாக அறிய முடியும்.

2006 ல் ஐரோப்பியாவில் நடைபெற்ற ஓர் வழக்கில், காரில் இருந்த கறுப்பு பெட்டி மூலம் உண்மை கண்டறியப்பட்டது. தற்சமயம் நவீன கார்களில், கறுப்பு பெட்டி பொருத்துவது விபத்தில்லா பயணங்களுக்கு வழிவகுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நெல் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு..! முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.!!

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

இதுதான் ஜனநாயகத்தின் அழகு. செல்வபெருந்தகைக்கு பாடம் எடுத்த அண்ணாமலை..!

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

Show comments