கடந்த 2010 ஆம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஃபோர்டு ஃபிகோ உள்நாட்டு சந்தை மட்டமின்றி, 37 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஃபோர்டு நிறுவனத்துக்கு புதிய முகவரியை பெற்றுத் தந்த இந்த கார் தற்போது விற்பனையில் 3 லட்சத்தை கடந்திருப்பது குறித்து ஃபோர்டு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஈக்கோஸ்போர்ட்டுக்கு கிடைத்துள்ள வரவேற்பு ஃபோர்டுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. எனவே, தனது டீலர் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்க உள்ளது. சோலன், கயா, ஆனந்த், சிகார், ஸ்ரீகங்கா நகர் உள்ளிட்ட 5 நகரங்களில் புதிய டீலர்ஷிப்புகளை விரைவில் திறக்க உள்ளது. இதுதவிர, நாடு முழுவதும் தொடர்ந்து புதிய ஷோரூம்களை திறக்கவும் திட்டமிட்டுள்ளது.