நிசான் நிறுவனத்தின் ஐரோப்பிய டிசைன் சென்டரால் வடிவமைக்கப்பட்ட முதல் ஐரோப்பிய மாடல் இது. 2006 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் உள்ள சுந்தர்லேண்ட் ஆலையில் இந்த எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது. 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த எஸ்யூவியின் உற்பத்தி துவங்கியது.
நிசான் நிறுவனத்தின் பி32 எல் என்ற புதிய பிளாட்பார்மில் இந்த எஸ்யூவி வடிவமைக்கப்பட்டது. நிசானின் புதிய கிராஸ்ஓவர் மாடல்கள் இந்த எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.
1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்களுடனும், 1.5 லிட்டர், 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் சர்வதேச மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆனால், இந்தியாவில் 1.5 லிட்டர் கே9கே எஞ்சினை பொருத்தி அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது.