Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதித்ய பிர்லா, ஐடியா செல்லுலர் சேர்ந்து ரூ.3900 கோடி வரி முறைகேடு

Webdunia
சனி, 6 ஏப்ரல் 2013 (11:33 IST)
FILE
ஆதித்ய பிர்லா மற்றும் ஐடியா செல்லுலர் நிறுவனங்கள் மொத்த ரூ.3900 கோடி வருமான வரி முறைகேடு செய்துள்ளதால் இந்திய வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்தியாவின் ஆதித்யா பிர்லா தொலைத்தொடர்பு நிறுவனம் கடந்த 2009 ஆம் ஆண்டில் ஐடியா செல்லுலர் நிறுவனத்துடன் இணைந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் தொலைத்தொடர்பு உரிமங்கள், பணப்பரிமாற்றம் போன்ற அனைத்து பொறுப்புகளும் ஒருங்கிணைக்கப்பட்டதாக அறிவித்தது.

இரு நிறுவனங்களும் ஒருங்கிணைக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்திருப்பதை, இந்திய வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. ஆதித்ய பிர்லா நிறுவனம் 2400 கோடியும், ஐடியா செல்லுலர் நிறுவனம் 1500 கோடியும் செலுத்தவேண்டும் என்று குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குறைவான விலையில் பங்குகள் கைமாற்றப்பட்டாலும், இதனால் மூலதன ஆதாயம் அதிகரித்துள்ளதாக வருமான வரி அலுவலகம் கருதுவதாக அலுவலகக் குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.

இத்தகவலை ஏற்றுக்கொண்ட ஐடியா செல்லுலர் நிறுவனம், இதற்கானத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. புயல் எச்சரிக்கை தளர்த்தப்பட்டதாக அறிவிப்பு..!

விண்ணில் செலுத்தப்படுகிறது பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்.. கவுண்ட் டவுன் தொடக்கம்..!

திருவனந்தபுரத்தில் இருந்து வந்த 8 லாரிகள்: மீண்டும் கேரளாவுக்கே செல்லும் மருத்துவக் கழிவுகள்

பொதுமக்கள் விரும்பி சாப்பிடும் பாப்கார்னுக்கு GST.. கூட்டத்தில் முடிவு

மீண்டும் பணி நீக்கம் செய்யும் கூகுள்.. சுந்தர் பிச்சை அறிவிப்பால் அதிர்ச்சியில் ஊழியர்கள்..!

Show comments