Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரணாப் முகர்ஜியின் ஒருமணி நேர செலவு ரூ.37 லட்சம்!

Webdunia
புதன், 26 டிசம்பர் 2012 (12:43 IST)
PTI
கடந்த அக்டோபரில் சுவர்ண விதான் சவுதா திறப்பு விழாவுக்கு கர்நாடக மாநிலம் பெல்காம் வந்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜ ி‌‌க்கு ஒரு நா‌ள் செலவு செ‌ய்த தொகை ரூ.37 லட்சம் எ‌ன்று த‌ற்போது தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி பிரணாப் முகர்ஜியின் வருகைக்காக சுற்றுலா இல்லம் புதுப்பிக்கப்பட்டது. அதற்காக ரூ.161 லட்சம் செலவிடப்பட்டது. இதில் ரூ.37 லட்சம் பிரணாப் முகர்ஜி தங்கும் அறைக்கு தேவையான வசதிகள் செய்ய செலவிடப்பட்டது. அந்த அறையில் பிரணாப் முகர்ஜி தங்கியது வெறும் ஒருமணி நேரம் மட்டுமே.

தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் பீமப்பா கடாட், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோகாக் தாலுக்காவின் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் குடியரசுத் தலைவரின் வருகைச் செலவைக் கேட்ட போது அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த செய்தி அறியப்பட்டுள்ளது.

ரூ.37 லட்சம் மக்களின் வரிப்பணத்தை ஒரு தனி மனிதனின் ஒருமணி நேரத் தங்கலுக்குப் பயன்படுத்துவது நியாயமா? அவர் நாட்டின் முதல் குடிமகனாகவே இருந்தாலும்!

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

வங்கதேசத்தில் ஒரே ஐஎம்இஐ எண் கொண்ட ஒன்றரை லட்சம் மொபைல் ஃபோன்கள் - மோசடியின் பின்னணி என்ன?

மேகதாது அணை விவகாரம்.! மத்திய அமைச்சருக்கு ராமதாஸ் கண்டனம்..!!

தமிழகத்தில் இன்னொரு இடைத்தேர்தலா? லால்குடி எம்.எல்.ஏ ராஜினாமா செய்ய போவதாக தகவல்..!

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! அதிமுகவை விளாசிய ஆர்.எஸ் பாரதி.!!

Show comments