Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவுப் பணவீக்கம் உயர்வு: பிரணாப் கவலை

Webdunia
வெள்ளி, 2 செப்டம்பர் 2011 (13:27 IST)
காய்கறிகள், பழ வகைகள், பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலைகள் உயர்ந்ததன் காரணமாக உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 10 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது கவலையளிப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 18ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் உணவுப் பணவீக்கம் 10.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது. காய்கறிகள் விலை 11.6 விழுக்காடும், வெங்காயத்தின் விலை 12.3 விழுக்காடும் உயர்ந்ததே உணவுப் பொருள் விலையேற்றத்திற்குக் காரணம் என்று அரசு வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உணவுப் பொருள் பணவீக்கம் உயர்ந்திருப்பது உண்மையிலேயே கவலையளிக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனால், இது இந்த பருவத்தில் ஏற்படும் விலையேற்றமே என்று சந்தை பார்வையாளர்கள் கூறுகின்றனர். சாகுபடிக்காலம் முடிந்து சந்தைக்கு காய்கறி வரத்து அதிகம் இருந்த காலத்தில் விலைகள் குறைவதும், முடிவுறும் காலத்தில் அதிகரிப்பதும் எப்போதும் ஏற்படுவதே என்று கூறுகின்றனர்.

ஆனால் உணவுப் பணவீக்கம் உயர்ந்துள்ளதால், ரூபாயின் பணவீக்கமும் அதிகரிக்கும் என்றும், இதனால் பொருளாதாரத்தின் மீது மேலும் அழுத்தம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments