Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 61 புள்ளிகள் உயர்வு
, செவ்வாய், 28 டிசம்பர் 2010 (10:29 IST)
நேற்றைய வர்த்தகத்தில் 44 புள்ளிகள் குறைந்து முடிந்த மும்பை பங்குச் சந்தை குறியீடு, இன்று காலை வர்த்தகத்தில் 61 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

உலோகங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் ஆகிய குறிப்பிட்ட வகைப் பங்குகளில் முதலீட்டாளர்கள் தெரிவு செய்து வாங்கியதால் இன்றைய வர்த்தகம் தொடக்கத்திலேயே உயர்வைக் கண்டுள்ளதாக பங்குச் சந்தை வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.

இன்று காலை உயர்ந்த 61.48 புள்ளிகளுடன், சென்செக்ஸ் 20,090.41 புள்ளிகளாகவும், தேச பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 12.80 புள்ளிகள் உயர்ந்து 6,010.90 புள்ளிகளாகவும் உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil