ஒரு லிட்டர் டீசலில் 23.08 கி.மீ. தூரம் ஓடும் நிசான் மைக்ராவை, நிசான் கார்களின் சென்னை விற்பனையாளரான ஷெரீ்ஃப் நிசான் பார்வையகத்தில் நிசான் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிமிநோபு டோகுயாமா சென்னையில் நேற்று நடந்த விழாவில் அறிமுகம் செயதுள்ளார்.
“இது அன்றாடம் வாகனம் ஓட்டுவதை அனுபவிக்க விரும்பும் மக்களுக்காக நம்பத்தக்க, ஒயிலான, பாதுகாப்பான மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த கார் ஆகும ்” என்று நிசான் நிறுவனம் கூறியுள்ளது.
டீசலி்ல் இயங்கும் நிசான் மைக்ரா எக்ஸ்வி மற்றும் எக்ஸ்வி - பிரீமியம் ஆகிய இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. க்ரீஜ் உட்புறத்துடன் கூடிய இந்தக் கார்கள் சன்லைட் ஆரஞ்ச், பிரிக் செட், பசி்ஃபிக் புளூ, ஸ்டார்ம் ஒயிட், பிளேட் சில்வர், ஓனிக்ஸ் பிளாக் ஆகிய ஆறு வண்ணங்களில் கிடைக்கும். நிசான் மைக்ரா டீசலின் சென்னை பார்வயக விலை எக்ஸ்வி ரூ.5,58,500, எக்ஸ்வி - பிரீமியம் விலை ரூ.6,04,500 ஆகும்.