Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் 10 பில்லியன் யூரோ முதலீடு: பிரான்ஸ் நிதியமைச்சர்

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2010 (13:09 IST)
இந்தியாவில் பிரான்ஸ் நாட்டு தொழில் நிறுவனங்கள் 10 பில்லியன் யூரோ (13.37 பில்லியன் டாலர்) முதலீடு செய்யவுள்ளதாக கூறியுள்ள அந்நாட்டு நிதியமைச்சர், காப்பீடு, சில்லறை வணிகம் ஆகியவற்றில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

புதுடெல்லியில் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபிக்கி) ஏற்பாடு செய்த இந்தியா பிரான்ஸ் வர்த்தக மன்றக் கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் நிதியமைச்சர் கிரிஷ்டினா லகார்டே, “10 பில்லியன் யூரோ என்பது வெறும் எண்ணிக்கையல்ல, எமது நாட்டு நிறுவனங்கள் அளித்துள்ள உறுதிமொழி. இதனை 2008ஆம் ஆண்டும் முதல் 2012ஆம் ஆண்டு வரை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டு நடைபெற்று வருகிறத ு” என்று கூறியுள்ளார்.

வணிகத்தைப் பொறுத்தவரை எல்லாமே கொடுக்கல், வாங்கல் அடிப்பட்டையில்தான் நடைபெற்று வருகிறது என்றும, இதேபோல் இந்தியாவும் பிரான்ஸ் நாட்டு நலனை கருத்தில்கொண்டு காப்பீடு, சில்லறை வணிகம் - குறிப்பாக பல்வேறு வணிக முத்திரைகளுடன் கூடிய பிரான்ஸ் நாட்டுப் பொருட்களை இந்தியாவில் விற்க அனுமதியளிப்பது போன்றவற்றை நடைமுறைக்கு கொண்டுவந்தால், பிரான்ஸ் நாட்டு நிறுவனங்கள் மேலும் அதிகமாக இந்தியாவில் முதலீடு செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள பிரான்ஸ் அதிபர் சர்கோஜியுடன் அமைச்சர் லகார்டி வந்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொழிலதிபர் மனைவியிடம் ரூ.10 கோடி பறித்த சென்னை நபர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

முதல்வர் பங்கேற்ற விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: அன்புமணி கண்டனம்..!

சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நாளை கனமழை வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

டிரம்ப் வெற்றி எதிரொலி: இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!

உங்கள் தாத்தா வேலைவெட்டி இல்லாமல் இருந்தாரா? உதயநிதிக்கு தமிழிசை பதிலடி..!

Show comments