Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருத்தி ஏற்றுமதி: ஜவுளி அமைச்சகம் விளக்கம்

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2010 (17:34 IST)
உள்நாட்டுத் தேவையை முழுமையாக மதிப்பீடு செய்த பின்னர்தான் கச்சா பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக ஜவுளி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

உள்நாட்டு நூற்பாலைகளுக்குத் போதுமான பருத்தி கிடைக்காததால் பருத்தி விலை கடந்த 2 மாதங்களில் மட்டும் 20 விழுக்காடு உயர்ந்துள்ளது என்றும், எனவே பருத்தி, பருத்தி நூல் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், இன்று மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு புள்ளி விவரத்துடன் பதிலளித்த ஜவுளித் துறை துணை அமைச்சர் பனபகா லட்சுமி இவ்வாறு கூறியுள்ளார்.

பருத்தி ஆலோசனை வாரியம் ( Cotton Advisory Board) கடந்த ஆகட்ஸ் மாதம் 27ஆம் தேதி கூடியது என்றும், அப்போது செய்த மதிப்பீட்டின்படி, பருத்து உற்பத்தி 325 இலட்சம் பொதிகளாகவும், உள்நாட்டுத் தேவை (பயன்பாடு) 266 இலட்சம் பொதிகளாகவும் மட்டுமே இருந்தது எனவும், அதனால்தான் பருத்தி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டில் மட்டுமன்றி, இதற்கு முந்தைய ஆண்டிலும் உள்நாட்டுத் தேவைக்கும் அதிகமாகவே பருத்தி உற்பத்தி இருந்தது என்றும், அதற்கான புள்ளி விவரங்களையும் பனபகா லட்சுமி வெளியிட்டார்.

2007-08 ஆம் ஆண்டில் உற்பத்தி 369 இலட்சம் பொதிகளாகவும், உள்நாட்டுத் தேவை 326 இலட்சம் பொதிகளாகவும், 2008-09ஆம் ஆண்டில் உற்பத்தி 335.50 இலட்சம் பொதிகளாகவும், பயன்பாடு 264 இலட்சம் பொதிகளாகவும், 2009-10ஆம் ஆண்டில் உற்பத்தி 373.50 இலட்சம் பொதிகளாகவும், பயன்பாடு 333 இலட்சம் பொதிகளாகவும் இருந்ததென்று பனபகா இலட்சுமி கூறியுள்ளார்.

உள்நாட்டுத் தேவை குறித்து பிரதமருக்கு எழுதிய தனது கடிததில், எப்போதும் மொத்த உள்நாட்டுத் தேவையில் சீனா 33 விழுக்காடு இருப்பில் வைத்திருப்பதையும், அது இந்தியாவில் 17 விழுக்காடக மட்டுமே உள்ளது என்பதை தமிழக முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

Show comments