Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிண்டால் ஸ்டீலிற்கு சுற்றுச் சூழல் அமைச்சகம் தாக்கீது

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2010 (14:51 IST)
கிழக்கு ஒரிசாவில் ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் அமைத்துவரும் எஃகுத் தொழிற்சாலைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை சுற்றுச் சூழல் அத்துமீறல் காரணங்களுக்காக ஏன் இரத்து செய்யக்கூடாது என்று விளக்கமளிக்குமாறு கோரி அந்நிறுவனத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தாக்கீது அனுப்பியுள்ளது.

இதேபோன்று, மராட்டிய மாநிலம் பூனா நகருக்கு வெளியே ஹிந்துஸ்தான் கட்டுமான நிறுவனத்தின் அங்கமான லாவாசா உருவாக்கிவரும் நகரத் திட்டத்திற்கும் கேள்வி எழுப்பி சுற்றுச் சூழல் அமைச்சகம் தாக்கீது அனுப்பியுள்ளது.

கிழக்கு ஒரிசாவில் ஜிண்டால் அமைத்துவரும் எஃகுத் தொழிற்சாலை, வருடத்திற்கு 6 மில்லியன் டன் எஃகு உற்பத்தித் திறன் கொண்டதாகும். இத்தொழிற்சாலையை எதிர்த்து அங்குள்ள மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் பசுமை சட்டங்கள் மற்றும் விதிகளை மீறியுள்ளதாக வந்துள்ள புகார்களைக் காட்டி, அதனடிப்படையில் தொழிற்சாலைக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ஏன் இரத்து செய்யக் கூடாது என்று விளக்கமளிக்குமாறு சுற்றுச் சூழல் அமைச்சகம் கேட்டுள்ளது.

லாவாசா நிறுவனம் 31 பில்லியன் டாலர் செலவில் மாபெரும் நகரத்தை நிர்மாணித்து வருகிறது. இதிலும் பசுமை விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாக வந்துள்ள புகார்களை அடுத்த சுற்றுச் சூழல் அமைச்சகம் தாக்கீது அனுப்பியுள்ளது.

ஒரிசாவின் நியாம்கிரி மலைப்பகுதியிலுள்ள அலுமனிய (பாக்சைட்) கனிமங்களை சுரங்கம் அமைத்து எடுத்து சுத்திகரிப்பு செய்யும் வேதாந்தாவின் 9.5 பில்லியன் டாலர் தொழிற்சாலைக்கு அளித்திருந்த அனுமதியை சுற்றுச் சூழல் அமைச்சகம் இரத்து செய்தது.

ஒரிசாவில் தென் கொரியாவின் பாஸ்கோ நிறுவனம் அமைத்துவரும் மிகப்பெரிய இரும்பு உருக்காலைக்கும் அளிக்கப்பட்டுள்ள அனுமதியை சுற்றுச் சூழல் அமைச்சகம் இரத்து செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

வேங்கைவயல் சம்பவம்.. இன்றோடு 2 ஆண்டுகள் நிறைவு! இதுதான் திராவிட மாடல்..? - பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்!

Show comments